வியாழக்கிழமை, ஜனவரி 30, 2025
வியாழக்கிழமை, ஜனவரி 30, 2025

HomeFact Checksசிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதா?

சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதா?

Claim: சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

Fact: சுற்றுலாப் பயணிகள் இரவில் சிகிரியாவை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளதுடன், இரவில் ஒளிரும் சிகிரியாவைக் காட்டுவதாகக் சமூக வலைத்தளங்களில் பரவும் படங்கள் உண்மையானவையல்ல என்பதையும் உறுதிப்படுத்தியது.

இலங்கையின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டதாகக் கூறும் பல பதிவுகள், இரவில் ஒளிரும் சிகிரியாவைக் காட்டும் படங்களுடன் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. Lion rock என்றும் அழைக்கப்படும் சிகிரியா குன்று கிட்டத்தட்ட 200 மீட்டர் உயரம் கொண்டது. இது இலங்கையின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் ஒரு பயனர் “Sigiriya night life” என்ற கூற்றுடன், இரவில் ஒளிரும் சிகிரியாவைக் காட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதா?

“வரலாற்றுச் சிறப்புமிக்க சீகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது.” என “Thedal 24 News” என்ற பேஸ்புக் பக்கம் பிரகாசமாக ஒளிரும் சிகிரியாவின் படத்துடன் ஒரு பதிவை பகிர்ந்திருந்தது.

பேஸ்புக் மற்றும் டிக்டொக்கில் பகிரப்பட்ட இதேபோன்ற பதிவுகளின் ஒரு சிலவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். 

Fact Check/Verification

இக்கூற்றுக்களின் உண்மைத்தன்மையை ஆராய சுற்றுலா அமைச்சு, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தொல்பொருள் திணைக்களம் மற்றும் சிகிரியா கோட்டையின் உத்தியோகபூர்வ பயண வலைத்தளம் போன்ற சிகிரியா கோட்டை தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களைக் கொண்ட வலைத்தளங்களில் நாம்  தேடலை மேற்கொண்டபோதும் அத்தகைய தீர்மானங்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

எவ்வாறாயினும், சில தொல்பொருள் தளங்களை இரவு நேர சுற்றுலாவுக்காக திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் சமீபத்திய அறிக்கைகளை பல்வேறு செய்தி வலைத்தளங்களில் நாங்கள் கண்டோம். “பல தொல்பொருள் தளங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு இரவில் திறக்கும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிகிரியா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இரவு நேர அணுகலை வழங்கும் முதல் இடமாக இருக்கும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும், பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.” என ஜனவரி 11, 2025 திகதியன்று News 1st செய்தி வெளியிட்டிருந்தது.

அதேபோல் ஏனைய சில செய்தி ஊடகங்கள் “சுற்றுலாத்துறையின் வருவாயை அதிகரிப்பதற்காக நிலவொளி இரவுகளில் வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா கோட்டைக்கு பார்வையாளர்களை அனுமதிக்க சுற்றுலா அமைச்சு முடிவு செய்துள்ளது.” மற்றும் “நிலவில் சிகிரியா(make clear description about sigiriya. Don’t mention only ’சிகிரியா’ . Follow this instruction all over in this FC)(Sigiriya in Moon) என்று அழைக்கப்படும் இந்த திட்டம், பௌர்ணமி இரவில், பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், இரண்டு நாட்களுக்குப் பிறகும் என ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்களுக்கு இரவில் சுற்றுலாப்பயணிகளுக்கு பார்வையிட அனுமதிக்கும்.” எனவும்  செய்தி வெளியிட்டிருந்தததை அவதானிக்க முடிந்தது. அந்த அறிக்கைகள் இங்கே மற்றும் இங்கே காணலாம்.

எவ்வாறாயினும், சிகிரியா கோட்டையை இரவு நேர சுற்றுலாவுக்காக திறந்து வைப்பதாக வெளியான செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் இரவில் சிகிரியாவை பார்வையிட எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சு ஒரு ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் போலியானவை எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், சிகிரியா கோட்டைக்கான உத்தியோகபூர்வ பயண வலைத்தளத்தை நாங்கள் ஆய்வு செய்தபோது, தினமும் சிகிரியா கோட்டையை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை காலை 5:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை குறிப்பிட்டிருந்தததோடு, சுவரோவியங்களுக்கான பகுதி மாலை 5:45 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இரவில் ஒளிரும் சிகிரியா கோட்டையின் படமானது, முதலில் முப்பரிமாண கட்டிடக்கலைஞரான இந்துல ஜெயசேகரவினால் இது ஒரு 3D  கலைப்படைப்பு எனக் கூறி பதிவிட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

Conclusion

சிகிரியா கோட்டை இரவு நேர சுற்றுலாவுக்காக திறந்திருப்பதாக பரவும் செய்தி தவறானது. அதே நேரம் சிகிரியா கோட்டை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் உண்மையானவையல்ல. அவை முப்பரிமாண வகையில் வடிவமைக்கப்பட்டவை.

Result: False

எமது மூலங்கள்

11.01.2025 அன்று News 1st இல் வெளியான செய்தி அறிக்கை.
04.01.2025 அன்று Daily Mirror இல் வெளியான செய்தி அறிக்கை.
04.01.2025 அன்று Sri Lanka Mirror இல் வெளியான செய்தி அறிக்கை.
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2025 ஜனவரி 15 ஆம் திகதிவெளியிடப்பட்ட ஊடக அறிக்கை.
சிகிரியா கோட்டைக்கான உத்தியோகபூர்வ பயண வலைத்தளம்.
14.01.2025 அன்று முப்பரிமாண கட்டிடக்கலைஞரான இந்துல ஜயசேகர பதிவிட்ட பேஸ்புக் பதிவு.


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular