Claim: தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரால் நாட்டை காப்பாற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்
Fact: இக்கூற்று பிழையாக வழிநடத்துகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் நாட்டைக் காப்பாற்றும் திறன் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்துக் கூறவில்லை. 1956ஆம் ஆண்டு தனது தந்தை ஆற்றிய பணி மூலம் இவர்களைப் போன்றவர்கள் இன்று அரசியலில் நுழைய முடிந்துள்ளது என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஊடகங்களுக்கு பேசும் வீடியோ தற்போது டிக்டொகில் வைரலாகி வருகின்றது.
“இதோ சந்திரிகாவின் சுயநலக் கருத்து: அனுரவாலும் ஹரினியாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாதாம். 1956 புரட்சியின் காரணமாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (அநுர போன்றவர்கள்) இன்று அரசியல் செய்ய முடிகிறது” என்ற சிங்கள மொழியிலான மிகைப்படுத்தப்பட்ட வாசகமும் டிக்டொகில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: 5,000 ரூபா நாணயத் தாள் இலங்கையில் இனி சட்டப்பூர்வமாக செல்லாதா? உண்மை என்ன?
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியொழுப்புவது தொடர்பில் திஸாநாயக்கவிற்கும் அமரசூரியவிற்கு உள்ள திறன் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியதாக வைரலான வீடியோ குறிப்பிடுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் முன்னாள் பிரதமரும், தந்தையுமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் நினைவு தினத்தினையொட்டி அன்னதான நிகழ்வொன்று கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த நிகழ்விலிருந்து வெளியேரும் போதே சந்திரிக்கா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி அனுர குமாரதுங்க திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவுடன் அவரைப் பாராட்டி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வாழ்த்து அனுப்பியதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே குறித்த வீடியோ வைரலாகியுள்ளது. இதனால், வைரலான இந்த வீடியோவின் நம்பகத்தன்மை தொடர்பில் தேடலொன்றை மேற்கொள்ள நியூஸ்செகர் தீர்மானித்தது. இது தொடர்பான சில அறிக்கைகளை இங்கு, இங்கு, இங்கு காண முடியும்.
Also Read: சூடான அன்னாசி நீர் புற்று நோயை குணப்படுத்தாது, வைரலாகியுள்ள பதிவு தவறானது
Fact check/Verification
குறித்த வீடியோவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் கருத்தை நியூஸ்செக்கர் குழுவினர் உன்னிப்பாகக் கேட்ட போது, 1956ஆம் ஆண்டு அவரது தந்தையின் அரசியல் பணிகளைப் பற்றி அவர் குறிப்பிடுவதுடன் அது குடும்ப மரபு அல்லது தலைமுறைச் செல்வம் இல்லாமல் பொதுமக்கள் அரசியலில் நுழைய முடியும் எனும் அரசியல் கலாச்சாரத்தை எவ்வாறு உருவாக்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1956ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை அறிந்து அநுராவும் ஹரிணியும் நாட்டைக் கட்டியெழுப்பினால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறுவதை கேட்க முடிந்தது.
மேலும், நியூஸ்செக்கர் குழு ‘ஜனாதிபதி’, ‘அனுர குமார திசாநாயக்க’, ‘ஹரினி அமரசூரிய’ மற்றும் ‘சந்திரிகா குமாரதுங்க’ ஆகிய முக்கிய சொற்களை சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேடியது. இவ்வாறான நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்ததை நாங்கள் அவதானித்தோம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பற்றிய தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதை தெளிவுபடுத்தவே இந்த ஊடக மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் வறிய பின்னணியில் உள்ள மக்களைப் பற்றி நான் ஒருபோதும் மோசமாகப் பேசமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறுகின்ற விடயம் இந்த வீடியோவின் 50ஆவது செக்கனில் உள்ளது.
இவ்வாறான பின்னணி கொண்ட மக்களை மேம்படுத்துவதற்காக கடந்த 1956ஆம் ஆண்டு அவருடைய பெற்றோர் மேற்கொண்ட பங்களிப்பே அவர்களின் அரசியல் நுழைவிற்கு காரணமாகியுள்ளது எவும் அவர் தெரிவித்தார். அத்துடன் புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் ஆகியோருக்கு தனது முழுமையான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Also Read: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வாக்குச் சீட்டின் வைரல் புகைப்படம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையது
Conclusion
தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூறியதாக டிக்டொகில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்று பிழையாக வழிநடத்தும் ஒரு கூற்றாகும்.
Result: Missing Context
எமது மூலங்கள்
லங்காதீப பத்திரிகையில் 2024.09.25ஆம் திகதி வெளியான செய்தி
எஸ்.எல். லீடரில் 2024.09.25ஆம் திகதி வெளியான செய்தி
லங்கா ட்ரூதில் 2024.09.25ஆம் திகதி வெளியான செய்தி
2024.09.30ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சி செய்தியில் ஒளிபரப்பான ஊடாக மாநாட்டின் வீடியோ
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்