Claim: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள்.
Fact: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள் என்று பரவும் புகைப்படங்கள் தவறானவையாகும். இப்புகைப்படங்கள் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்களல்ல. அவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (ISRO) வெளியிடப்பட்ட புகைப்படம் மற்றும் நாசா விண்வெளி வீரர் டொனால்ட் பெட்டிட் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட 2025 மகாகும்பமேளாவின் புகைப்படங்களாகும்.
நாசாவின் விண்வளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக தங்கியிருந்த நிலையில் இன்று இம்மாதம்19 ஆம் திகதி ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலத்தின் மூலமாக பூமியை வந்தடைந்தனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் இடம்பெற்ற மஹா கும்பமேளா நிகழ்வின் புகைப்படத்தை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்தார் என இரண்டு வகையான புகைப்படங்களுடனான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த புகைப்படத்தை (புகைப்படம் 01) X தளத்தில் பகிர்ந்த பயனர் ஒருவர் “நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் உறவினர் சுனிதா வில்லியம்ஸ் படம்பிடித்த ஒரு தருணத்தை பகிர்ந்து கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த காலத்தில், சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) விண்கலம் இந்தியாவின் மீது பறந்தபோது, சுனிதா வில்லியம்ஸ் உலகின் மிகப்பெரிய மத ஒன்றுகூடல் தருணத்தை புகைப்படமாக பதிவு செய்தார். விண்வெளியில் இருந்து மகா கும்பமேளா. …” எனும் கருத்துடன் பகிர்ந்திருந்தார்.

இது போன்ற பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.


அதேபோல் மற்றுமொரு புகைப்படத்தை (புகைப்படம் 02) X தளத்தில் பகிர்ந்த மற்றுமொரு பயனர் ” சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு மஹா கும்பமேளா புகைப்படங்களுடன் பத்திரமாக பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்” எனும் தலைப்புடன் பகிர்ந்திருந்தார்.

இதே புகைப்படத்துடனான பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.



Factcheck / Verification
இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த்துவதற்கு முதலில் இது தொடர்பான செய்திகள் இந்தியா மற்றும் சர்வதேச செய்தி தளங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்ததில் எந்தவொரு உத்தியோகபூர்வ செய்திகளும் இப்புகைப்படங்கள் தொடர்பில் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், சுனிதா வில்லியம்ஸினால் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்புகைப்படங்களின் நம்பகத்தன்மையை அறிய நாம் google reverse image search முறையை பயன்படுத்தி ஆராய்ந்தோம். அதன்போது இப்புகைப்படமானது (புகைப்படம் 01) இஸ்ரோ (ISRO) என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது. மேலும் இந்த புகைப்படம் உட்பட இன்னும் 7 புகைப்படங்களி ISRO நிறுவனம் தமது உத்தியோகபூர்வ X தளமான ISRO InSight இல் ஜனவரி 22ஆம் திகதி பதிவிட்டிருப்பதை எம்மால் உறுதி செய்ய முடிந்தது.

அதேபோல் இதுதொடர்பில் உத்தியோகபூர்வ செய்தியறிக்கைகளையும் எம்மால் கண்டறிய முடிந்தது. அவ்வறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
மேலும் 2ஆவது புகைப்படத்தையும் இதே முறையில் ஆராய்ந்தபோது, அது நாசா விண்வெளி வீரர் டொனால்ட் பெட்டிட் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட 2025 மகாகும்பமேளாவின் புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இவர் இந்த புகைப்படங்களை தமது உத்தியோகபூர்வ x தளத்தில் ஜனவரி 27 ஆம் திகதியன்று பதிவு செய்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

மேலும் இப்புகைப்படம் தொடர்பிலும் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ செய்தியறிக்கைகளையும் எம்மால் கண்டறிய முடிந்தது. அவ்வறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Conclusion
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள் என சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் உண்மையல்ல. அவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (ISRO) வெளியிடப்பட்ட புகைப்படம் மற்றும் நாசா விண்வெளி வீரர் டொனால்ட் பெட்டிட் இனால் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட 2025 மகாகும்பமேளாவின் புகைப்படங்களாகும்.
Result: False
எமது மூலங்கள்
22.01.2025 அன்று ISRO InSight X தளத்தில் வெளியான 2025 மகா கும்பமேளா புகைப்படங்கள்.
25.01.2025 அன்று Times of India தளத்தில் வெளியான செய்தியறிக்கை
22.01.2025 அன்று ABP News தளத்தில் வெளியான செய்தியறிக்கை
27.01.2025 அன்று நாசா விண்வெளி வீரர் டொனால்ட் பெட்டிட்டின் X தளத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட 2025 மகாகும்பமேளாவின் புகைப்படம்
27.01.2025 அன்று Livemint.com தளத்தில் வெளியான செய்தியறிக்கை
27.01.2025 அன்று NDTV தளத்தில் வெளியான செய்தியறிக்கை
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.