Claim: பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட இரண்டு முத்திரைகள், உலக தபால் தினத்திற்காக தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
Fact: இது தவறான கூற்றொன்றாகும். பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட முத்திரைகள் அவர்களுக்கு பிரத்தியோகமான தனிப்பட்ட நினைவுப் பொருளாக தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது. இந்த முத்திரைகள் பொதுமக்களின் விநியோகத்திற்காக வெளியிடப்படவில்லை.
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் சமூக ஊடகங்களில் வைரலாகியது. 150ஆவது உலக தபால் தினத்தை கொண்டாடும் வகையில் இரண்டு அமைச்சர்களினதும் முகங்கள் அடங்கிய தபால் முத்திரைகளை தபால் திணைக்களம் வெளியிட்டதாக இப்படங்களை பகிர்பவர்கள் கூறுகின்றனர்.
முன்னைய ஆண்டுகளைப் போலல்லாமல், “மிகவும் அர்த்தமுள்ள” செய்திகளைக் கொண்டிருக்கும் இந்த முத்திரைகளில் அரசியல்வாதிகளின் முகங்கள் காணப்பட்டதாக பல பிரதான செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் இந்த செய்தி மற்றும் படங்களை முன்னிலைப்படுத்திக் காணப்பட்டன. அத்தகைய சில செய்திகள் இங்கே, இங்கே, இங்கே பார்வையிட முடியும்.
இந்தக் கூற்றை பேஸ்புக்கில் பரவலாகக் காணக் கிடைத்தது. அது தொடர்பான பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே காண முடியும்.
உலக அஞ்சல் தின கொண்டாட்டங்களின் போது இலங்கையின் வரலாறு மற்றும் கலாசாரத்தை கௌரவிக்கும் தபால் முத்திரைகள் எப்போதும் உள்ளடக்கப்பட்டுள்ளதே தவிர, அரசியல்வாதிகளுடையது அல்ல என்று வைரலாகின்ற கூற்றின் உண்மைத் தன்மையினை சரிபார்க்க நியூஸ்செக்கர் முடிவு செய்தது.
உலக தபால் தினத்திற்காக பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட இரண்டு முத்திரைகள் பொதுமக்களின் விநியோகத்திற்காக தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது என்று வைரலாகின்ற கூற்றின் உண்மைத் தன்மையினை சரிபார்க்க நியூஸ்செக்கர் முடிவு செய்தது.
Also Read: தற்போதைய ஜனாதிபதி, பிரதமரினால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என சந்திரிக்கா குமாரதுங்க கூறினாரா?
Fact Check/Verification
நியூஸ்செக்கர் குழு முதலில் பிரதமரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு விஜயம் செய்த போது, 150ஆவது உலக தபால் தினத்தை கொண்டாடும் வகையில், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி தபால் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களை இங்கே பார்வையிட முடியும்.
இதனைத் தொடர்ந்து “ஜனாதிபதி”, “உலக தபால் தினம்”, “ஹரினி அமரசூரிய” மற்றும் “விஜிதா ஹேரத்” ஆகிய முக்கிய சொற்களை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் கீவேர்ட் தேடலை நியூஸ்செக்கர் முன்னெடுத்தது. இதன்போது, வைரலாகியுள்ள கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெளிவுபடுத்திய தபால் திணைக்களத்தின் ஊடக அறிக்கையினை நாங்கள் கண்டோம்.
Also Read: 5,000 ரூபா நாணயத் தாள் இலங்கையில் இனி சட்டப்பூர்வமாக செல்லாதா? உண்மை என்ன?
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட பிரத்தியோக தனிப்பட்ட முத்திரைகள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்திரைகளை வெளியிடுவதற்கு பொறுப்பாக தபால் திணைக்களத்திலுள்ள பிரிவின் ஊடாக இலங்கையின் எந்தவொரு பிரஜையும் அவர்கள் விரும்பும் எந்தவொரு புகைப்படத்தையும் முத்திரையாக வெளியிட முடியும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கட்டணம் அறிவிடப்படும் இந்த சேவையினை விருப்பமானவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பேஸ்புகில் பதிவொன்றினை வெளியிட்டுள்ள ரீடிங் ஸ்டாம்ப்ஸ் எனும் குழுமத்தின் முத்திரை நிபுணரான நிரோஷன் பிரீஸை நியூஸ்செக்கர் குழு தொடர்புகொண்ட போது,
“இவை நினைவு முத்திரைகள் அல்ல, ஆனால் நினைவுச் சின்னங்களாக தேவையானவர்களுக்கு தபால் திணைக்களத்தினால் முத்திரைகளை வடிவமைக்க முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இலங்கையில் உள்ள முத்திரைகள் நினைவு/சிறப்பு முத்திரைகள் மற்றும் பயன்பாட்டு முத்திரைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறிப்பிடப்பட்ட முத்திரையானது தனிப்பட்ட நினைவுப்பொருள் முத்திரையாகும்.
இதில் உங்கள் முகத்தின் முத்திரை எனும் QR குறியீடும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகளால் சமூகத்தில் ஏற்படும் தப்பெண்ணத்தை குறைக்க தவறான தகவல் அல்லது பிழையான தகவல்களை பரப்புவர்களை நாம் அடையாளம் காண அக்கறை கொள்ள வேண்டும்” என்றார்.
Also Read: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வாக்குச் சீட்டின் வைரல் புகைப்படம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையது
Conclusion
150ஆவது உலக தபால் தினத்திற்காக பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காகவும் பாவனைக்காகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட முத்திரைகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுவது பிழையான தகவலாகும். பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் அவர்களுக்கு பிரத்தியேகமாக தனிப்பட்ட நினைவுப் பொருட்களாக தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது. அவை பொது விநியோகத்திற்காக அல்ல.
Result: Missing Context
எமது மூலங்கள்:
2024.10.09ஆம் திகதி News19 LKயில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை
2024.10.09ஆம் திகதி டெய்லிமிரரில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை
2024.10.09ஆம் திகதி ஹிருவில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை
2024.10.09ஆம் திகதி பிரதமர் அலுவலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு
2024.10.10ஆம் திகதி தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை
முத்திரை வெளியீட்டுப் பணியகத்தின் இணையத்தளம்
2024.10.10ஆம் திகதி தபால் முத்திரை நிபுணரான நிரோஷன் பெரேராவினால் வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவு
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்