Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Elections
Claim:
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான புகைப்படம்
Fact:
வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட. சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் குழு இந்த கூற்றினை மறுத்துள்ளது
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே சந்திப்பது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்கள் மற்றும் வட்ஸ்அப் போன்ற தகவல் பரிமாற்ற சேவைகளில் வைரலாகி வருகின்றது.
இத்தகைய ஒரு பதிவின் காப்பக இணைப்பை இங்கே பார்வையிட முடியும்.
பேராசிரியர் மெத்திகா விதானகே இந்த தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நியூஸ்செக்கர் தேடிய போது இந்த விடயம் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மெத்திகா விதானகே ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பளார் சஜித் பிரேதமாசவினை சந்தித்து அவருக்கான ஆதரவினை தெரிவித்துள்ளதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜனாஸா எரிப்பின் முக்கிய காரணி மெத்திகா விதானகே’ என்ற பதிவுடன் இந்தப் படம் பகிரப்பட்டு வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தீவிர பிரச்சாரகரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, அவரது பேஸ்புகில் வெளியிட்டதாகக் கூறப்படும் இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷொட்டை ஒத்ததாக இந்த படமுள்ளது. இதே படம் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
கொவிட் – 19 காலப் பகுதியில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினராக இந்த மெத்திகா விதானகே செயற்பட்டார். அத்துடன், கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை தகனம் செய்யுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இவர் ஆலோசனை வழங்கினார்.
சடலங்களை தகனம் செய்வதை முஸ்லிம்கள் விரும்புவதில்லை. இதனால் பலவந்த தகனத்தினை நிறுத்துமாறு முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்த போதிலும், சடலங்களை அடக்கம் செய்ய அப்போதைய ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை. இதனை கண்டித்து குரல் கொடுத்தவர்களில் சஜித் பிரேதாசவும் ஒருவராவர்.
இந்த புகைப்படம் தொடர்பில் குகுள் ரீவேர்ஸ் இமேஜில் மெத்திகா விதானகே மற்றும் சஜித் பிரேதமதாச போன்ற சொற்களைப் பயன்படுத்தி எமது தேடலை மேற்கொண்டோம். எனினும் எந்தவொரு படத்தினையும் பெற முடியவில்லை.
வைரலாகும் இந்தப் படத்தை நாங்கள் ஆராய்ந்த போது எடிட் செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தினை தோற்றுவித்தது. வைரலாகிய படத்தினை குகுள் ரீவேர்ஸ் இமேஜில் தேடிய போது, இதே மேலங்கியுடன் விருதொன்றினைப் பெறும் புகைப்படத்தினை பேராசிரியர் மெத்திகா விதானகே அவருடைய பேஸ்புகில் பதிவேற்றியுள்ளார்.
வைரலாகும் படத்தைப் போலவே குறித்த புகைப்படத்திலும் அதே முகபாவனைகள் மற்றும் சைகைகளை அவர் கொண்டிருப்பதை காண முடிந்தது. இதன் மூலம் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
இது தொடர்பில் எமது குழு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் குழுவினை தொடர்புகொண்டு வினவிய போது, அவர்களும் வைரலாகும் இந்த படம் எடிட் செய்யப்பட்டது என்றதுடன் சஜித் பிரேமதாசவுக்கும் பேராசிரியர் விதானகேவுக்கும் இடையில் அத்தகைய சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.
அது மாத்திரமல்லாமல், பிரேமதாசவை ஆதரித்து பேராசிரியர் விதானகே எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
இது தொடர்பில் கருத்துக்களைப் பெறுவதற்காக பேராசிரியர் மெத்திகா விதானகேயினை தொடர்புகொண்டோம். இது தொடர்பில் அவரின் கருத்துக் கிடைத்தால், இக்கட்டுரையில் அதனை பதிவேற்றுவோம்.
இதற்கமைய, பேராசிரியர் மெத்திகா விதானகே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் இருப்பதாக கூறப்பட்டு வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு பொய்யான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளதை அறிகிறோம்.
Our Sources
சுய பகுப்பாய்வு
பேராசிரியர் மெத்திக்கா விதானகேயின் பேஸ்புக் பதிவு – 01.04.2024
சஜித் பிரேதமாசவின் பிரச்சார பிரிவின் கருத்து
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்