செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

HomeFact Checkபாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அஷேன் சேனாரத்ன போட்டியிடுகின்றாரா?

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அஷேன் சேனாரத்ன போட்டியிடுகின்றாரா?

Claim: பாராளுமன்ற தேர்தலில் பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்ன தேசிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிடுகின்றார் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.

Fact: தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அஷேன் களமிறங்கவில்லை. சுயேட்சை குழு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அஷேனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வீடியோவிலுள்ள அஷேனின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு அவர் அணிந்துள்ள டீசேர்டில் தேசிய மக்கள் சக்தியின் பெயரும் சின்னமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்ன போட்டியிடுகின்றார் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. இது தொடர்பாக டிக்டொக்கில் காணக் கிடைத்த பதிவொன்றினை இங்கு பார்வையிடலாம்.

கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி பதிவிடப்பட்டுள்ள இந்த பதிவில் “Ashen Sri Lanka AKD NPP #npp #akd #forupage #friends #youtubers #ashen #foodtiktok #fypシ゚ #vibes #anurakumaradissanayaka @Anura Kumara Dissanayake @Ashen Senarathna @NPP TAMIL #srilanka” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில்

இதேவேளை, வைரலாக பரப்பப்படுகின்ற வீடியோவில் அவர் அணிந்துள்ள டீசேர்டில் தேசிய மக்கள் சக்தியின் பெயரும் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் “சமூக ஆர்வலரும் பிரியாணி கடை உரிமையாளருமான அஷேன் சேனாரத்ன எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்” என்ற பதிவொன்றும் பேஸ்புகில் பகிரப்பட்டுள்ளது. குறித்த பதிவினை இங்கு பார்வையிட முடியும்.

பாராளுமன்ற தேர்தலில்

Also Read: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வாக்குச் சீட்டின் வைரல் புகைப்படம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையது

வெவ்வேறுபட்ட இந்த இரண்டு பதிவுகளும் உண்மையென நினைத்து சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்திருந்தமையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள இந்தப் பதிவின் உண்மைத் தன்மையினை சரிபார்க்க நியூஸ்செக்கர் முடிவு செய்தது.

Fact Check/Verification

குறித்த இந்த பதிவுகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கில் கீவேர்ட் தேடலை நியூஸ்செக்கர் மேற்கொண்டது.
இதற்கமைய தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் “அஷேன் சேனாரத்ன”, “பாராளுமன்ற தேர்தல்”, “தேசிய மக்கள் சக்தி” ஆகிய சொற்களைத் தேடினோம்.

இதன்போது, அவர் இந்தப் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவதை அறிவிக்கும் வீடியோவொன்றினை கண்டோம். குறித்த வீடியோவினை இங்கு பார்வையிட முடியும்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக அஷேன் சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்ட செய்தியினையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த செய்தியினை இங்கு, இங்கு பார்வையிட முடியும்.

Also Read: தற்போதைய ஜனாதிபதி, பிரதமரினால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என சந்திரிக்கா குமாரதுங்க கூறினாரா?

இந்த வேட்புமனு நிராகரிப்பு எதிராக தற்போது அஷேன் சேனாரத்னவினால் உயர் நீதிமன்றத்தினால் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுத் தாக்கல் குறித்த வெளியான செய்தியினை இங்கு பார்வையிட முடியும். இதேவேளை, குறித்த வீடியோவில் உள்ள புகைப்படத்தில் தேசிய மக்கள் சக்தியின் பெயரும் சின்னமும் பொறிக்கப்பட்ட டீசேர்ட் தொடர்பில் நியூஸ்செக்கர் குழுவினர் தேடலை மேற்கொண்டனர்.

கூகுள் ரிவேர்ஸ் இமேஜின் ஊடாக மேற்கொண்ட தேடலின் போது, 2023ஆம் ஆண்டு கிறிஸ்மஸின் போது எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தினை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. அதாவது, குறித்த புகைப்படத்தில் அஷேன் சேனாரத்ன அணிந்துள்ள வெள்ளை நிற டீசேர்டில் தேசிய மக்கள் சக்தியின் பெயரும் அக்கட்சியின் சின்னமும் உள்ளடக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் போட்டியிடுவதாக் கூறி வைரலாகும் புகைப்படம்

Conclusion

இதற்கமைய நியூஸ்செக்கர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலோ, கேஸ் சிலிண்டரிலோ அஷேன் சேனாரத்ன களமிறங்கவில்லை. மாறாக சுயேட்சையாக அவர்கள் களமிறங்கிய போதிலும் அவரின் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அஷேன் சேனாரத்ன போட்டியிடுகின்றார் என்பது தவறனா தவறான செய்தியாகும்.

Result: False

எமது மூலங்கள்:
பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அஷேன் சேனாரத்ன அறிவித்த வீடியோ
சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக அஷேன் சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்ட செய்தி
வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக வெளியான செய்தி


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular