Claim: நுவரெலியா, கம்பஹா மற்றும் கேகாலையில் விளைந்த மிகப்பெரிய இராட்சத அளவிலான கரட், அன்னாசி மற்றும் பலாப்பழத்தைக் காட்டும் காணொளிகள்.
Fact: இந்த மூன்று விதமான காணொளிகளும் AI தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை.
இலங்கையின் நுவரெலியாவில் விளைந்த மிகப்பெரியளவிலான கரட், கம்பஹாவில் விளைந்த பிரம்மாண்டமான அன்னாசிப்பழம் மற்றும் கேகாலையில் வளர்ந்த இராட்சத அளவிலான பலாப்பழம் ஆகியவற்றை விவசாயிகள் பெருமையுடன் காண்பிப்பதைக் காட்டும் காணொளிகள் “உண்மையானவை” என பேஸ்புக், டிக்டொக் மற்றும் யூடியூபில் மூன்று விதமான காணொளிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த காணொளிகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.


குறிப்பாக இதில் கேகாலையில் விளைந்ததாக கூறப்படும் இராட்சத பலாப்பழமானது உலகிலேயே பிகப்பெரிய பலாப்பழம் எனவும் சில பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.



Fact Check / Verification
இந்த மூன்று காணொளிகளிலும் குறிப்பிடப்பட்ட முக்கிய சொற்களான விளைநிலப் பிரதேசங்களின் பெயர்களினூடாக நாம் முதலில் தேடலை மேற்கொண்டோம். எனினும் அப்பிரதேசங்களில் இவ்வாறான பெரியளவிலான கரட்/ அன்னாசி/ பலாப்பழம் விளைந்ததாகவோ அல்லது அறுவடை செய்யப்பட்டதாகவோ எந்தவொரு பதிவுகளையும் எம்மால் காணமுடியவில்லை.
மேலும், இந்த மூன்று காணொளிகளையும் உன்னிப்பாக அவதானித்தபோது, அவற்றில் உள்ள மனிதர்களின் முகங்கள் மற்றும் அவர்களின் உடல் அசைவுகள் ஆகியவை நம்பத்தகுந்ததாக காணப்படவில்லை. எனவே இம்மூன்று காணொளிகளும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவையா என்பதைஆராய நாம் முடிவு செய்தோம்.
இந்த காணொளிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, Hive Moderation மற்றும் WasItAI ஆகிய AI உள்ளடக்க-கண்டறிதல் கருவிகளின் மூலம் பரிசோதனை செய்தோம். அவற்றின் முடிவுகளை கீழே காணலாம்.
இராட்சத கரட் ஐ காட்டும் காணொளி
Hive Moderation: 77.2% AI தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட Deepfake உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.
WasItAI: AI மூலம் உருவாக்கப்பட்டது.


இராட்சத அன்னாசிப்பழத்தைக் காட்டும் காணொளி
Hive Moderation: 90.4% AI தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட Deepfake உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.
WasItAI: AI மூலம் உருவாக்கப்பட்டது.


இராட்சத அன்னாசிப்பழத்தைக் காட்டும் காணொளி
Hive Moderation: 93% AI தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட Deepfake உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.
WasItAI: AI மூலம் உருவாக்கப்பட்டது.


மேலும் இந்த காணொளியானது தினகரன் பத்திரிகையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டதைப்போன்ற ஒரு பதிவும் அண்மையில் பதிவாகியிருந்ததைத் தொடர்ந்து “போலியாக வடிவமைக்கப்பட்ட தினகரன் பேஸ்புக் பக்கத்தில் இந்த காணொளி பதிவிடப்பட்டிருக்கிறது. இதற்கு எதிரான நடவடிக்கைகளை எமது சட்டப் பிரிவு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு பிழையாக வழி நடத்துவோர் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.” என தினகரன் பத்திரிகையின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவித்தலொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதனை இங்கே காணலாம்.

Conclusion
இலங்கையில் நுவரெலியா, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் விளைந்த/ கண்டெடுக்கப்பட்ட இராட்சத கரட், அன்னாசிப்பழம் மற்றும் பலாப்பழம் என பகிரப்படும் மூன்று காணொளிகளும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகளாகும்.
Result: Altered Photo/ Video
எமது மூலங்கள்
Hive Moderation tool
WasItAI tool
தினகரன் பத்திரிகையின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவு
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.