வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024

HomeFact ChecksNews5,000 ரூபா நாணயத் தாள் இலங்கையில் இனி சட்டப்பூர்வமாக செல்லாதா? உண்மை என்ன?

5,000 ரூபா நாணயத் தாள் இலங்கையில் இனி சட்டப்பூர்வமாக செல்லாதா? உண்மை என்ன?

Claim: இலங்கையில் 5,000 ரூபா நாணயத் தாள் இனி சட்டபூர்வமாக பாவனையில் இல்லை

Fact: இது பொய்யான தகவல் என இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியது

இலங்கையில் 5,000 ரூபா நாணயத் தாள் இனி பாவனையில் இல்லை என்ற பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. டிக்டொகில் @hatton.suresh எனும் கணக்கில் இந்தப் பதிவு பகிரப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ள இந்த பதிவிற்கு 15,300 விருப்பங்களும் 324 கருத்துக்களும் இச்செய்தி பதிவேற்றப்படும் வரை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 5,000 ரூபா நாணயத்தாள்

Also Read: சூடான அன்னாசி நீர் புற்று நோயை குணப்படுத்தாது, வைரலாகியுள்ள பதிவு தவறானது

இதேவேளை, குறித்த பதிவு பேஸ்புகிலும் பகிரப்பட்டுள்ளது. அதனை இங்கு பார்வையிடலாம்

இலங்கையில் 5,000 ரூபா நாணயத்தாள்

Fact check/Verification

இதன் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் நியூஸ்செக்கர் கூகுளில் ‘5000 ரூபாய்’, ‘நாணயத் தாள்’, ‘இலங்கை’ போன்ற முக்கிய சொற்களைக் கொண்டு தேடலைத் தொடங்கியது. எவ்வாறாயினும், பொருத்தமான முடிவுகள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

மேலும், இலங்கை மத்திய வங்கி இது தொடர்பாக எதும் அறிக்கை விடுத்துள்ளதா என அவர்களின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றில் தேடல் மேற்கொண்ட போது, அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொண்டதாக எந்தவொரு பதிவும் கிடைக்கப்பெறவில்லை.

அதேவேளை, இலங்கையிலுள்ள வங்கிகளின் இணையத்தளங்கள் மற்றும் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றிலும் இந்த விடயம் தொடர்பான தேடுதலை மேற்கொண்ட போதும் எந்தவொரு பதிவும் கிடைக்கவில்லை.

இந்த விடயத்தினை மேலும் உறுதி செய்துக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் தொடர்பாடல் துறையின் உயர் அதிகாரியொருவரை நாம் தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான எவ்விதமான முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் குறித்த தகவல் முற்றிலும் பொய்யானது என அவர் எமக்கு உறுதி செய்தார். மேலும், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள 5,000 ரூபா நாணயத் தாள் இன்னும் பாவனையில் உள்ளதையும் அவர் எமக்கு உறுதி செய்தார்.

Also Read: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வாக்குச் சீட்டின் வைரல் புகைப்படம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையது

Conclusion

நியூஸ் செக்கர் மேற்கொண்ட தேடலின் அடிப்படையில், 5,000 ரூபா நாணயத் தாள் இனி பாவனையில் இல்லை என்று பரவும் தகவல் பொய்யானது என்பது கண்டறியப்பட்டது.

Result: False

Sources:
இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி
இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளம்


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular