Claim:
இலங்கைக்கு கொரோனா வைரஸை கொண்டு வந்தது முஸ்லிம்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Fact:
வைரலான இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்த தொற்றுநோய் தொடர்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தியதற்காக ஆளும் கட்சியை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கண்டிக்கும் பாராளுமன்ற உரையின் முக்கிய பகுதிகளை அழித்து விட்டே இந்த வீடியோ பகிரப்படுகின்றது.
முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இழிவான கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வெளியிடும் டிக்டாக் வீடியோவென்று தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் இலங்கைக்கு கொரோனா வைரஸை முஸ்லிம்கள் கொண்டு வந்ததாக சஜித் பிரேமதாச கூறுவதைக் கேட்க முடிகின்றது.
எவ்வாறாயினும், இந்தக் கூற்று தவறானது என்றும், குறித்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் நியூஸ்செக்கர் கண்டறிந்தது. இந்த வீடியோ பேஸ்புக், டிக்டாக் போன்ற ஏனைய சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டது.
Also Read: பேராசிரியர் மெத்திகா விதானகே சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவா? தவறான கூற்றுடன் எடிட் செய்யப்பட்ட படம்
Fact check/Verification
இந்த வீடியோவை கீஃப்ரேம்களாகப் பிரித்து, “சஜித் பிரேமதாச”, “கொரோனா வைரஸ்” மற்றும் “பாராளுமன்றம்” என்ற முக்கிய வார்த்தைகளுடன் reverse imageஇல் சரிபார்ப்பு செயல்முறையொன்றினை நியூஸ்செக்கர் முன்னெடுத்தது. இதன்போது 2020.11.03ஆம் திகதி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரைக்கு எம்மைக் கொண்டு சென்றது.
நாட்டில் கொரோனாவை பரப்புகின்றார்கள் என்ற பலியை முஸ்லிம் சமூகத்தில் போட அரசாங்கம் முயற்சிக்கின்றது என பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச விமர்ச்சித்தை கேட்க முடிகின்றது. தற்போது வைரலாகும் உரையின் பகுதியினை உண்மையான வீடியாவின் 04 நிமிடங்கள் மற்றும் 15 செக்கனில் நாம் கண்டுபிடித்தோம்.
இலங்கைக்கு கொவிட்டை கொண்டுவந்ததாக முஸ்லிம்களை குற்றஞ்சாட்டுவதன் மூலம் திட்டமிட்டு அவர்களை இலக்குவைப்பதாக அரசாங்கத்தினை சஜித் பிரேமதாசா விமர்சிப்பதை குறித்த வீடியோவில் பார்வையிட முடிந்தது.
“கொவிட் காரணமாக உயிரிழப்பவர்களை அவர்களது விருப்பப் படி தகனம் அல்லது அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒழுங்குவிதிகளை அமுல்படுத்துவதாக சுகாதார அமைச்சர் தெரிவிக்கின்றார். எனினும், கொரோனா வைரஸை முஸ்லிம்கள் தான் பரப்புக்கின்றனர் என்ற குற்றச்சாட்டினை அவர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முஸ்லிம்களை இழிவுபடுத்தும் அரசாங்கத்தை விமர்சிக்கும் சஜித் பிரேமதாசாவின் உரையின் ஒரு பகுதி எடிட் செய்யப்பட்டு விடயத்திற்கு அப்பாற்பட்ட வகையில் பகிரப்பட்டுள்ளதை நாம் கண்டுபிடித்தோம்.
Conclusion
இதனால் கொரோனாவை முஸ்லிம்கள் கொண்டுவந்தனர் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில்ஆற்றியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு தவறான கூற்றுக்களுடன் பகிரப்பட்டுள்ளதை நாம் கண்டுபிடித்தோம்.
Result: Missing context
Sources
கடந்த 03.11.2020ஆம் திகதி சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் பேஸ்புக் வீடியோ
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்