Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
News

அமரகீர்த்தி அத்துகோரள கொலைக் குற்றவாளிகள் NPPயுடன் தொடர்புடையவர்கள் அல்ல, அவர்கள் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியதாக Newswire வெளியிட்ட செய்தியறிக்கை.
இந்தக் கூற்று தவறானது. சதுரங்க அபேசிங்கே அத்தகைய கருத்து வெளியிடவில்லை என்ன பகிரங்கமாக மறுத்துள்ளதோடு, Newswire செய்தி நிறுவனம் அந்த செய்தியறிக்கை போலியானது என உறுதிப்படுத்தியுள்ளது.
அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 குற்றவாளிகளுக்கும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கருத்து தெரிவிப்பதாக கூறி ஒரு சமூக ஊடகப் பதிவு சமீபத்தில் பரவி வருகிறது. மேலும், அவர்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று அபேசிங்க கூறியதாக இந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
TikTok மற்றும் Facebook இல் பகிரப்பட்ட இந்தப் பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.


இந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் நாம் ஆராய்ந்தபோது, அது இலங்கையின் பிரபல செய்தித் தளமான Newswireன் சமூக ஊடக பதிவுகளின் வடிவமைப்பை ஒத்திருந்தததோடு, அதன் watermark பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இருப்பினும், பிரதி அமைச்சர் அபேசிங்கேவின் இத்தகைய கூற்றுடன் வெளியிடப்பட்ட எந்த செய்தியறிக்கையும் Newswire தளத்தில் காணப்படவில்லை.
Newswire இன் சமூக ஊடக பக்கங்களை மேலும் பரிசோதித்தபோது, 12.02.2026 அன்று அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலான இந்த செய்திப் பதிவு போலியானது என்று பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டோம்.

இந்தப் பதிவினை பிரதி அமைச்சர் அபேசிங்கேவும் அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் பகிர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்தப் பதிவில் உள்ள தவறான தகவல்கள் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில், ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கிலும் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
2022 மே 09ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெற்ற முன்னாள் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகியோர் மீது நிட்டம்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது இருவரும் உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் 41 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குற்றம் சுமத்தப்பட்ட 12 பேருக்கு மரணதண்டனையும், 04 குற்றவாளிகளுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனையும் விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம் 11.02.2026 அன்று தீர்ப்பளித்துள்ளது. எனினும் இதனுடன் தொடர்புடைய எவ்வித கருதட்டுக்களையும் பிரதி அமைச்சர் அபேசிங்க பகிரங்கமாக வெளியிடவில்லை.
அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரும் தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடையவர்கள் அல்ல என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியதாகக் பரவும் Newswire செய்தியறிக்கை போலியாக வடிவமைக்கப்பட்டது. Newswire செய்தித்தளம் மற்றும் அபேசிங்க ஆகிய இருவரும் இந்த செய்திப் பதிவு போலியானது என்பதை பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
FAQs
Q1. வைரலாக பரவும் செய்திப்பதிவு எதனைக் காட்டுகிறது?
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிப்பதைப் போன்ற புகைப்படத்துடன், “மரண தண்டனை பெற்ற 12 பேரில் யாரும் NPP-யைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் JVP அல்லது முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.” எனும் சிங்களத்திலான கூற்று.
Q2. அபேசிங்க இந்தக் கூற்றை தெரிவித்தாரா?
இல்லை.
Q3. அபேசிங்கே இந்தக் கருத்தை வெளியிட்டதாக NewsWire அல்லது இலங்கையில் உள்ள வேறு எந்த செய்தி நிறுவனமும் கூறியதா?
இல்லை.
எமது மூலங்கள்
Newswire செய்தித்தளத்தினால் வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவு
பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க பகிர்ந்த பேஸ்புக் பதிவு
ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் பகிர்ந்த பேஸ்புக் பதிவு

Keerthika Mahalingam
March 23, 2026
Keerthika Mahalingam
January 23, 2026
Keerthika Mahalingam
November 5, 2025