Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks

ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, விலையேற்றம் காரணமாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக போராட்டமொன்றில் உரையாற்றுவதாகப் பரவும் காணொளி பதிவுகள் .
இந்தப் பதிவுகளிலுள்ள காணொளியானது, ராஜபக்ச அரசாங்கத்தின் போது எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக, 2021.12.23 அன்று மஹரகமவில் ஜே.வி.பி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் டில்வின் சில்வா ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலினால் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது தனது கோபத்தை வெளிப்படுத்தி, ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஒரு போராட்டத்தில் உரையாற்றுவதாகக் காட்டும் காணொளி அடங்கிய பல TikTok பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன. அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.



இப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த “டில்வின் சில்வா அனுராவின் மீது கோபமாக உள்ளார்” என சிங்கள கூற்று, அவர் சமீபத்திய எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக பதிலளித்திருப்பதாக காட்டுகிறது.
டில்வின் சில்வாவும் அனுர குமார திசாநாயக்கவும் ஒரே அரசியல் கூட்ட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இந்தப் பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய நாம் தீர்மானித்தோம்.
Google reverse image search மூலம் இந்த காணொளியானது, 2021.12.23 அன்று கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக ஜே.வி.பி நடத்திய போராட்டத்தில் டில்வின் சில்வா ஆற்றிய உரையின் பகுதியொன்றென நாம் கண்டறிந்தோம்.
இந்தக் காணொளியில் அவர் மேலும் கூறுகையில், “உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறையும்போது, இலங்கையிலும் எரிபொருள் விலை குறைய வேண்டும். ஆனால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது” என்கிறார். இந்தக் கூற்று, அவரது காணொளி சமீபத்திய உலக எரிபொருள் விலையேற்றத்துடன் தொடர்புடையதல்ல என்பதையும் காட்டுகிறது.
2021 டிசம்பர் ஜே.வி.பியினால் மேற்கொண்ட இந்த போராட்டம் குறித்த மேலும் நம்பகமான செய்தி அறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
28.02.2026 அன்று தொடங்கிய ஈரான்-இஸ்ரேல்/அமெரிக்கா இடையிலான போர் சர்வதேச அளவில் பரவி, பிற நாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து எரிபொருளைக் கொள்முதல் செய்யும் பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 2022 ஆண்டில் ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி மீண்டும் ஏற்படாமல் தடுக்கத் திட்டமிடுவதாக தற்போதைய NPP அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தின் காரணமாக இந்த காணொளிகள் மக்களை பெரிதும் தவறாக வழிநடத்துகிறது.
எரிபொருள் விலையேற்றத்தினால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதுள்ள கோபத்தில், ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா போராட்டமொன்றில் ஜனாதிபதிக்கெதிராக உரையாற்றுவதாகக் பரவும் பதிவுகள் தவறானவை. இந்தக் காணொளி, கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலை உயர்வுகளுக்கு எதிராக, 2021.1223 அன்று மஹாராகமவில் ஜே.வி.பியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போராட்டத்தில் டில்வின் சில்வா ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.
FAQs
Q1: டில்வின் சில்வா ஜனாதிபதி அனுரவுக்கு எதிராக சமீபத்தில் உரையாற்றினாரா?
இல்லை. இந்தக் காணொளி டில்வின் சில்வா 2021ல் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதைக் காட்டுகிறது.
Q2: இந்த காணொளி எப்போது மற்றும் எங்கு எடுக்கப்பட்டது?
இந்தக் காணொளி 2021.12.23 அன்று மஹாரகமவில் ஜே.வி.பி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டது.
Q3: இந்த காணொளி சமீபத்திய எரிபொருள் விலை உயர்விற்கு தொடர்புடையதா?
இல்லை.
எமது மூலங்கள்
24.12.2021 அன்று JVP Sri Lanka YouTube கணக்கில் வெளியான காணொளி
25.12.2021 Apuru Gossip YouTube கணக்கில் வெளியான காணொளி
23.12.2021 அன்று Daily Mirror செய்தித்தளத்தில் வெளியான செய்தியறிக்கை
23.12.2021 அன்று The Morning LK செய்தித்தளத்தில் வெளியான செய்தியறிக்கை

Keerthika Mahalingam
April 7, 2026

Keerthika Mahalingam
March 30, 2026

Keerthika Mahalingam
February 17, 2026