Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks

தற்போதைய எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையின் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இரண்டு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதல்.
இந்த காணொளி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது எடுக்கப்பட்டது. இது 2022.05.20 அன்று திருகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட மோதலை காட்டுகிறது.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் மோதல் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் கட்டுப்பாட்டுடனே விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், @italyhoru என்ற TikTok பயனொருவர் பகிர்ந்த காணொளியானது, எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதை காட்டும் அதேவேளை, தடையற்ற வாகன இறக்குமதி மற்றும் எரிபொருள் விநியோகத்தை உறுதியளித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சார உரையை இணைத்து பதிவிடப்பட்டிருந்தது.


எனவே இந்தக் காணொளி சமீபத்தில், அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் பதிவுசெய்யப்பட்டதா என்பதை உறுதி செய்ய இது தொடர்பில் ஆராய நாம் தீர்மானித்தோம்.
நாங்கள் முதலில் “எரிபொருள் நிலைய மோதல்”, “இலங்கை”, “2026”, “எரிபொருள் பற்றாக்குறை”, மற்றும் “அனுர குமார திசாநாயக்க” போன்ற முக்கிய சொற்களைப் பயன்படுத்தி தேடலைச் மேற்கொண்டோம். எனினும், இலங்கையில் நிலவும் தற்போதைய எரிபொருள் பற்றாக்குறையால் மக்களிடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்த எந்தவொரு சமீபத்திய செய்தியையும் எங்களால் கண்டறிய முடியவில்லை.
பின்னர், இக்காணொளியிலிருந்து எடுத்த சில முக்கிய காட்சிகளை reverse image search மூலம் ஆராய்ந்த போது, இக்காணொளி 2022.05.21 அன்று YouTubeஇல் வெளியிடப்பட்டிருப்பதை கண்டறிந்தோம்.
Furthermore, on 21.05.2022, Ada Derana reported in the 6.55 pm newscast that this video was about a clash between people at a fuel filling station in Trincomalee on the evening of 20.05.2022.
எனவே, TikTokஇல் வைரலாகும் இந்தக் காணொளியானது பழையது என்றும், 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியின் போது எடுக்கப்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலால், இலங்கை உட்பட பல நாடுகள் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இதனால் சமூக ஊடகங்களில் அரசு எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 2022 பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காலத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளை தற்போதைய சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி தவறாக வழிநத்தும் வகையில் இந்தக் காணொளிகள் மீண்டும் பகிரப்படுகின்றன.
இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைக் காட்டும் காணொளியானது தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமையில் பதிவு செய்யப்பட்டதாக பகிரும் பதிவுகள் தவறானவை. இந்தக் காணொளி 2022.05.20 அன்று திருகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நடைபெற்ற சம்பவத்தைச் காட்டுகிறது.
FAQs
Q1. இந்தக் காணொளியில் என்ன காட்டப்படுகிறது?
நெரிசலான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இரண்டு குழுக்களுக்கிடையிலேற்பட்ட மோதல்.
Q2. இந்தக் காணொளி தற்போதைய எரிபொருள் நெருக்கடியுடன் தொடர்புடையதா?
இல்லை. இது 2022 பொருளாதார நெருக்கடி காலத்தில் நடந்த சம்பவம்.
Q3. இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது?
2022 மே 20 அன்று திருகோணமலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நடந்தது.
எமது மூலங்கள்
21.05.2022 அன்று ARVLoshan News YouTube கணக்கில் வெளியிடப்பட்ட காணொளி.
2022.05.21 YouTube இல் பதிவேற்றம் செய்யப்ப Ada Derana Prime Time News.

Keerthika Mahalingam
March 30, 2026

Keerthika Mahalingam
March 23, 2026

Keerthika Mahalingam
March 13, 2026