Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks

TikTok காணொளியொன்று "முஸ்லிம்கள் அதிகம் தடுமாற வேண்டாம்" என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறுவதைக் காட்டுகிறது.
இந்தக் காணொளி தவறானது. இது செயற்கை தொழில்நுட்பத்தை(AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
தற்போது TikTokல் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, “முஸ்லிம்கள் அதிகம் தடுமாற வேண்டாம். நாட்டை சட்டப்பூர்வமாக நிர்வகிக்கவே நாங்கள் நாட்டைக் கைப்பற்றினோம். எமது இனம் சிங்களம்” என்று சிங்கள மொழியில் பேசுவதைக் காட்டுகிறது.

“තම්බි (தம்பி)” என்ற வார்த்தை சிங்கள பேச்சு வழக்கில் முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் என்பதால், இந்த டிக்டாக் காணொளியில் காட்டப்பட்டுள்ளபடி, திசாநாயக்க அதை அதிகாரப்பூர்வமாகவோ அல்லது வேறுவிதமாகவோ தகாத முறையில் பயன்படுத்துவாரா என்று நியூஸ் செக்கரில் நாங்கள் சந்தேகித்தோம்.
இலங்கையின் முஸ்லிள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதேபோன்ற அறிக்கையேதும் வெளியிட்டாரா என்பதை நாம் முதலில் பிரதான ஊடகங்களில் ஆராய்ந்தபோது, அவர் அவ்வாறான எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பதைக் கண்டறிந்தோம்.
Google reverse image தேடல் மூலம் காணொளியில் உள்ள பல key frameகளைக் கொண்டு ஆராய்ந்தபோது, இது போன்ற கருத்தை வெளியிட்ட எந்தவொரு காணொளியும் அதனுடன் பொருந்தும் வகையில் காணப்படவில்லை.
இந்த TikTok காணொளி செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டதா என்பதை நாங்கள் ஆராய்ந்ததில்,




2024 ஆம் ஆண்டு NPP கட்சியில் இருந்து ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்று அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர் வெளியிட்ட கொள்கை அறிக்கைகளில், இலங்கையின் அனைத்து மக்களுக்கும் (சிங்கள, தமிழ், முஸ்லிம், பரங்கியர் மற்றும் பிறர்) எந்த பாகுபாடும் இல்லாமல் சம உரிமைகள் வழங்கப்படும் என்று கூறினார். அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், அவர் “තම්බි (தம்பி)” என்ற வார்த்தையை அரிதாகவே பயன்படுத்தியுள்ளார். அதன்படி, TikTokல் வெளியிடப்பட்ட இந்த காணொளி சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் அமைந்திருந்தது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, “තම්බි (தம்பி)” அல்லது முஸ்லிம் சமூகத்திடம் “அதிகம் தடுமாற வேண்டாம்” என்று கூறுவதைக் காட்டும் TikTok காணொளி தவறானது. இந்த காணொளி செயற்கை நுண்ணறிவை(AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
FAQs
Q1. “තම්බි (தம்பி)” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
இந்த வார்த்தையின் அகராதி அர்த்தம் “இளைய சகோதரர்” ஆனால் பலர் இதை அன்றாட வாழ்வில் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் இழிவான முறையில் மறைமுகமாக குறிப்பிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.
Q2. இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா?
இல்லை.
Q3. இந்த காணொளி போலியானது என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?
Hive Moderation, Image Whisperer, Sightengine மற்றும் Undetectable ai detector போன்ற AI உள்ளடக்கங்களை கண்டறியும் தளங்களின் மூலமாக உறுதிப்படுத்த முடிந்தது.
எமது மூலங்கள்
Undetectable Ai Audio Detector
Hive Moderation Ai Detector
Image Whisperer Ai Image Detector
Sightengine Ai Detector

Keerthika Mahalingam
April 7, 2026

Keerthika Mahalingam
March 30, 2026

Keerthika Mahalingam
March 23, 2026