Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
ஈரானிய குண்டு தாக்குதலிலிருந்து அழுதுகொண்டே தப்பியோடும் இஸ்ரேலிய படையினரின் காணொளி.
இக்காணொளி ஈரான் மற்றும் இஸ்ரேலிடையே நிலவும் தற்போதைய தாக்குதலுடன் தொடர்புடையதல்ல. இது 2024 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா போர் முனையிலிருந்து இஸ்ரேலிய படை வீரர்கள் தப்பிச் செல்லும் போது எடுக்கப்பட்டது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலின் மத்தியில், “ஈரானிய குண்டு தாக்குதலிலிருந்து அழுதுகொண்டே தப்பியோடும் இஸ்ரேலிய வீரர்கள்” எனும் தலைப்புடன் ஒரு காணொளி TikTok, Facebook மற்றும் Instagram ஆகிய சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளியை தற்போது இஸ்ரேல், ஈரான் இடையே நிலவும் போர் நிலைமைகளின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.




இந்த காணொளி தொடர்பில் ஏதேனும் செய்திகள் சர்வதேச பிரதான ஊடகங்களில் சமீபத்தில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.
Reverse Image Search முறையில் ஆராய்ந்த போது, இந்தக்காணொளி 27.10.2024 அன்று “Ulusal Kanal” என்ற YouTube பக்கத்தில் வெளியாகியிருந்தது. அதில் “ஹிஸ்புல்லா தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய வீரர்கள் கண்ணீருடன் ஓடிவிட்டனர்.” என்ற துருக்கிய தலைப்புடன் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த காணொளி, “ஹிஸ்புல்லாஹ் வெற்றியாளர்!” எனும் குறிப்புடன் “Yaser” என்ற X தள பயனரொருவரால் 2024.10.22 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் இதே காணொளி இரண்டு வெவ்வேறு TikTok கணக்குகளினூடாக பகிரப்பட்டிருந்தது. அதனை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
மேலும், மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பில் ஆராய்ந்த போது, அது ஹிஸ்புல்லா போர் முனையில் தப்பிச் செல்லும் இஸ்ரேலிய வீரர்களின் வீடியோ காட்சி என்பதை தெரிவித்து CNN YouTube தளத்தில் 11.12.2024 அன்று “ஹிஸ்புல்லாவிலிருந்து போர் முனையில் தப்பிச் செல்லும் இஸ்ரேலிய வீரர்கள் அழும் காட்சிகள் ஒரு பிரபலமான தலைப்பாக மாறியுள்ளன!” என்ற துருக்கிய மொழியிலான தலைப்பில் பதிவிடப்பட்டிருந்த காணொளியொன்றில் காணமுடிந்தது. ஹிஸ்புல்லா (Hezbollah) என்பது லெபனான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கமாகும்.
ஈரானிய குண்டு தாக்குதலிலிருந்து அழுதுகொண்டே தப்பியோடும் இஸ்ரேலிய வீரர்கள் என சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் காணொளி தவறானது. இந்த காணொளி தற்போதைய ஈரான்–இஸ்ரேல் பதற்றத்துடன் தொடர்புடையதல்ல. இது 2024 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா போர் முனையில் இருந்து இஸ்ரேலிய படையினர் பின்வாங்கும் தருணத்தில் பதிவான காணொளியாகும்.
FAQs
Q1. இந்த காணொளி தற்போதைய ஈரான்–இஸ்ரேல் மோதலுடன் தொடர்புடையதா?
இல்லை.
Q2. காணொளியின் உண்மையான பின்னணி என்ன?
இது 2024 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா போர் முனையிலிருந்து ஓடும் இஸ்ரேலிய படையினரின் காட்சி.
Q3. இந்த காணொளி குறித்து சமீபத்தில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா?
இல்லை. இந்த காணொளி தற்போதைய ஈரான்–இஸ்ரேல் மோதலுடன் தொடர்புடையதாக சமீபத்தில் எந்த சர்வதேச பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகவில்லை.
எமது மூலங்கள்
2024.10.27 அன்று Ulusal Kanal யூடியூப் கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி.
2024.10.22 அன்று Yaser என்ற X தள பயனரால் பதிவிடப்பட்ட காணொளி.
2024.10.23 அன்று Sabah என்ற TikTok கணக்கில் பதிவிடப்பட்ட காணொளி.
2024.10.26 அன்று masi.j5 என்ற TikTok கணக்கில் பதிவிடப்பட்ட காணொளி.
2024.12.11 அன்று CNN யூடியூப் அலைவரிசையில் துருக்கி மொழியில் வெளியிடப்பட்ட காணொளி.