Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
ஷார்ஜாவில் நடந்த போட்டிக்குப் பின்னர் இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே யான மோதலைக் காட்டும் காணொளி.
இந்த காணொளி உண்மையானதல்ல. இது செயற்கை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
ஷார்ஜாவில் நடந்த போட்டிக்குப் பிறகு இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே நடந்த மோதலைக் காட்டும் 15 வினாடிகள் நீளமான காணொளியொன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
டிக்டாக், பேஸ்புக் மற்றும் X தளங்களில் பகிரப்பட்ட இந்த காணொளியை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.


“இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மோதல்” என்ற முக்கிய வார்த்தை தேடலை நாம் மேற்கொண்டபோது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை டோஹாவில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இந்தியா ஏ அணி பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியால் தோற்கடிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்ச் மறுக்கப்பட்ட பின்னர் சர்ச்சை வெடித்தது.” என செய்தியறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். அவ்வறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
எனினும், எந்த அறிக்கையிலும் வைரலான வீடியோ இடம்பெற்றிருக்கவில்லை. மேலும் டோஹாவில் நடந்த இந்த போட்டி, ஷார்ஜாவில் நடந்தது என்ற வைரல் கூற்றுக்கு உண்மைக்கு முரணானக காணப்பட்டதையும் நாம் அவதானித்தோம்.
விளையாட்டு வீரர்களின் ஜெர்சியில் காணப்படும் சிதைந்த சொற்கள் மற்றும் சிதைந்த கைகள் போன்ற சில காட்சி முரண்பாடுகள் பொதுவான AI படங்களுக்கான அம்சங்களை காண்பித்தன.

இந்த காணொளியின் முதல் பதிவு 14.11.2025 அன்று இன்ஸ்டாகிராமில் “Jhatka Ai” என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த கணக்கு தொடர்ந்து AI காணொளிகளைப் பதிவேற்றுவதோடு, இக்கணக்கின் bioவில் “AI + Memes = Entertainment Redefined” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
“96.3% AI-உருவாக்கப்பட்ட அல்லது போலி உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது” என AI உள்ளடக்கத்தைக் கண்டறியும் Hive Moderation தளம் உறுதிப்படுத்தியது. மேலும், WasitAI காணொளியின் சில பகுதிகளை AI எனக் கண்டறிந்தது.


ஷார்ஜாவில் நடந்த போட்டிக்குப் பின் இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான மோதலைக் காட்டும் காணொளி உண்மையானதல்ல. வைரலாகும் இந்த காணொளி AI-யால் உருவாக்கப்பட்டது.
எமது மூலங்கள்
14.11.2025 அன்று @Jhatkaai இன்ஸ்டராகிராம் கணக்கில் வெளியான பதிவு
Hive Moderation
WasitAI tool