Sunday, July 6, 2025

Fact Checks

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்(TRCSL) புதிய ஒழுங்குவிதிகளினால் அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் பாதிக்கப்படுமா?

banner_image

Claim: இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில்(TRCSL) பதிவுசெய்யப்பட்ட IMEI இலக்கம் இல்லாமல் இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் 2025 ஜனவரி 28 க்குப் பின் வலையமைப்பு இணைப்பைப் பெற முடியாது.

Fact: 2025 ஜனவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு மாத்திரமே இந்த விதி பொருந்தும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில்(TRCSL) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகள், டாங்கிள்கள்(dongles), கைக் கணனிகள்(tablets) மற்றும் ட்ரோன்கள்(drones) உள்ளிட்ட ,  தொலைத்தொடர்பு சாதனங்கள் தெளிவான சர்வதேச மொபைல் சாதன அடையாள இலக்கத்துடன்(IMEI) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில்(TRCSL) இல் பதிவு செய்யப்பட வேண்டும் என்று TRCSLஇன் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறை 2025 ஜனவரி 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களின் பயன்பாடு மற்றும் அங்கீகரிக்கப்படாத சாதனங்களின் விநியோகத்தை திறம்பட தடுக்கும் என்றும் TRCSL குறிப்பிட்டுள்ளது.

IMEI என்பது ஒவ்வொரு தொலைத்தொடர்பு சாதனத்திற்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான அடையாள எண் ஆகும். வழமையாக, இலங்கையிலுள்ள உற்பத்தியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சாதனங்கள் நுகர்வோரை அடைவதற்கு முன்னரே, சிறப்பு உரிமத்தின் மூலம் TRCSL இல் அதன் IMEI இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்த காணொளி யூடியூப்பில் பகிரப்பட்டதிலிருந்து, இந்த விதிமுறை  ஜனவரி 28 க்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும் என்று சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் மற்றும் X தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

இது போன்ற பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இந்த கூற்றுக்கள் பொதுமக்களிடையே அச்சத்தை தூண்டியுள்ளதுடன், புதிய நடைமுறைக்கு இணங்க ஜனவரி 28 க்குப் பிறகு அனைவரும் புதிய தொடர்பாடல் சாதனங்களை வாங்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள்.

Fact Check/Verification

இவ்விடயம் தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றனவா என நாம் முதலில் ஆராய்ந்தோம். இந்த புதிய ஒழுங்குமுறை ஜனவரி 29 திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், TRCSL ஆல் அங்கீகரிக்கப்பட்ட IMEI இலக்கத்துடன், TRCSL ஆல் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் விற்பனையாளர் உரிமத்தை வைத்திருக்கும் விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே கையடக்க தொலைபேசிகள், டாங்கிள்கள்(dongles), கைக் கணனிகள்(tablets) போன்ற சிம் அட்டை கொண்டு பயன்படுத்தப்படும் சாதனங்களை கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்றும் அறிக்கைகள் சுட்டிக்காட்டின. மேலும் ஜனவரி 29 முதல் தொலைத்தொடர்பு வழங்குநர்கள் வலையமைப்புகளில்(telecommunication operators’ networks) பதிவு செய்யப்படாத சிம் அட்டைகள் கொண்டு பயன்படுத்தப்படும் சாதனங்கள் செயல்படாது எனவும் அவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

“ஜனவரி 28 க்கு முன்னர் உள்ளூர் தொலைத்தொடர்பு வழங்குநர்களின் வலையமைப்புகளுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.” என டெய்லி மிரர் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தகவல்களை உறுதிப்படுத்தTRCSL இனால் வெளியிடப்பட்டுள்ள யூடியூப் காணொளியில் நாம் கவனம் செலுத்தினோம்.

“TRCSL ஆல் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இந்த பொருட்களை அடிக்கடி விற்பனை செய்யும் இடைத்தரகர் விற்பனையாளர்களால் ஏற்படும் எந்தவொரு மோசடிகளிலிருந்தும் நுகர்வோரைப் பாதுகாப்பதை புதிய ஒழுங்குவிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.” என புதிய விதிமுறை தொடர்பான கூடுதல் விபரங்களை குறிப்பிடுகையில், TRCSL இன் பணிப்பாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார்.

“அங்கீகரிக்கப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு வழங்குநர்களுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட சாதனங்கள் இந்த புதிய நடைமுறையினால் பாதிக்கப்படாது அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சொந்தமான அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான சாதனங்கள் இதனால் பாதிக்கப்படாது.” எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஜனவரி 28 க்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த சாதனங்கள் புதிய சட்டத்தால் பாதிக்கப்படாது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

“ஜனவரி 28 க்கு முன்னர் தொலைத்தொடர்பு வலையமைப்பு சேவை வழங்குநர்களுடன் இணைக்கப்பட்ட IMEI இலக்கம் செயல்படுத்தப்பட்ட சாதனங்களுக்கு இந்த விதி பொருந்தாது” என TRCSL இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion

TRCSL இன் புதிய ஒழுங்குமுறை காரணமாக ஜனவரி 29 முதல் அங்கீகரிக்கப்பட்ட IMEI இலக்கம் இல்லாமல் புதிதாக வாங்கப்படும் சாதனங்கள் மட்டுமே பாதிக்கப்படும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாதனங்களுக்கு இவ்விதிமுறை பொருந்தாது. ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள தொலைத்தொடர்பு சாதனங்கள் ஜனவரி 28, 2025 க்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்களின் மூலம் தொலைத்தொடர்பு இணைப்பைத் தொடரும்.

Result: Missing Context

எமது மூலங்கள்
9.01.2025 அன்று Daily Mirror இல் ‘IMEI பதிவு தேவைப்படும் சாதனங்கள் TRCSL இல் ஜனவரி 28 ஆம் திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்’ என்ற தலைப்பில் வெளியான செய்தியறிக்கை.
10.01. 2025 அன்று TRCSL இன் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையில் வெளியிடப்பட்ட “TRCSL இன் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் புதிய ஒழுங்குமுறை குறித்து விளக்கும் காணொளி.”
RCSL இன் உத்தியோகபூர்வ இணையத்தளம்


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected]​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

150

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage