Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
மலையகத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைக் காட்டும் காணொளி.
இந்தக்காணொளி செயற்கை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மலையகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.10 வினாடிகள் கொண்ட இந்த குறுகிய காணொளியிலுள்ள உள்ள சிங்கள தலைப்பு, “மழை அனைவருக்கும் அழகானதல்ல” என்று கூறுகிறது. மேலும், “மலையகத்திலும் சில பகுதிகளில் பலத்த மழை….. ஒரு எஸ்டேட் மூழ்கிய நிலையில் அதிலிருந்து வெளியேறும் மக்கள்” என்ற கூற்றுடன் இந்த காணொளிகள் பகிரப்பட்டிருந்தன.
TikTok மற்றும் Facebook இல் பரவலாகப் பகிரப்பட்டு வரும் இந்த காணொளியை பலர் மலையகத்தின் உண்மையான நிலையை சித்தரிப்பதாகக்கூறி பகிர்ந்திருந்தனர். அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இக்காணொளியுடன் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி Google Keyword தேடலை மேற்கொண்டபோது இந்த காணொளியையோ அல்லது இதில் இடம்பெற்ற காட்சிகளைக் காட்டக்கூடிய நம்பகமான செய்தி அறிக்கைகளையோ கண்டறியமுடியவில்லை.
வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குறிப்பிட்ட இடம் அல்லது திகதி போன்ற அடிப்படையான தவகவல்கள் இந்த காணொளியில் குறிப்பிடபட்டிருக்கவில்லை. இது அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை தோற்றுவித்தது.
காணொளியில் உள்ள மக்களிடையே இயற்கைக்கு மாறான உடல் அசைவுகளையும், மென்மையான அமைப்பையும் நாங்கள் கவனித்தோம், இவை இரண்டும் AI-தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் பொதுவான குறிகாட்டிகளாகும்.
மேலும், பகிரப்பட்டிருந்த இந்த காணொளியில் OpenAI Sora இன் Watermark-னை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது இந்தக் காணொளி செயற்கைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக குறிக்கிறது.

Hive Moderation எனும் AI உள்ளடக்கங்களை கண்டறியும் தளத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில், இந்த காணொளியானது AI-தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

அதுமட்டுமன்றி இந்த காணொளியின் key frameஐ Sightengine, AI or Not மற்றும் Image Whisperer போன்ற செயற்கை உள்ளடக்கங்களைக் கண்டறியும் தளங்களில் பரிசோதித்தோம். இம்மூன்று தளங்களும் அப்புகைப்படம் AI உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தின.



இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக பலத்த மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் போன்றவற்றால் பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலையகத்தில், குறிப்பாக மத்திய மாகாணம் பெருமளவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நிலச்சரிவுகள் மற்றும் ரயில் நடவடிக்கைகள் போன்ற போக்குவரத்து சேவைகளில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இது போன்ற AI-ஆல் உருவாக்கப்பட்ட காணொளிகள் உண்மையான சம்பவங்களைக் காட்டுவதாகக் கூறி தவறான தகவல்களை எளிதில் பரப்பலாம்.
இலங்கையில் மலையகத்தில் வெள்ளப்பெருக்கால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைக் காட்டும் காணொளி உண்மையானதல்ல. இது AI-தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளியாகும். OpenAI Sora watermark, AI கண்டறிதல் கருவிகள்(AI Detectors) ஆகியன இந்த காணொளி செயற்கைத்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.
FAQs
Q1. இலங்கையில் மலைநாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் காட்டும் இந்த காணொளி உண்மையானதா?
இல்லை. இந்த காணொளி AI-யால் உருவாக்கப்பட்டது.
Q2. இந்த காணொளி AI-யால் உருவாக்கப்பட்டது என்பது எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது?
காணொளியிலுள்ள OpenAI “Sora” logo, இயற்கைக்கு மாறான மனித உடல் அசைவுகள் செயற்கை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை காட்டுகிறது. Hive Moderation, Sightengine, AI or Not, மற்றும் Image Whisperer போன்ற தளங்கள் இந்த காணொளி AI உள்ளடக்கத்தை கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது.
Q3. இலங்கையில் தற்போது உண்மையாக ஏதேனும் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறதா?
ஆம். இலங்கையில் மத்திய மாகாணத்தின் சில பகுதிகள் உட்பட பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளத்தை சந்தித்து வருகிறது, ஆனால் சமூக ஊடகங்களில் பரவிய இந்த காணொளி எந்தவொரு உண்மையான நிகழ்வோடும் தொடர்புடையது அல்ல.
எமது மூலங்கள்
Hive Moderation
Sightengine
AI or Not
Image Whisperer