Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
Claim: நீருக்கடியிலுள்ள ராமர் சேது பாலத்தின் இடிபாடுகளை ஆராயும் ஸ்கூபா டைவர்ஸின் காணொளி.
Fact: இந்த காணொளி AIஇனால் உருவாக்கப்பட்டது.
ராமர் சேது பாலமும் அதன் இடிபாட்டு எச்சங்களும்/சிதைவுகளும் நீருக்கடியில் ஆராயப்படுவதைக் காட்டுவதாக ஒரு காணொளி சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. ஒரு நிமிடத்திற்கும் மேலான இந்த காணொளியில், ஸ்கூபா டைவர்ஸ் குழு ஒன்று பாறைகள், பழங்கால கட்டமைப்புகளின் எச்சங்கள் மற்றும் ஒளிரும் சிலை போன்றவற்றை ஆய்வு செய்வதைக் காட்டுகிறது.
பல சமூக ஊடக பயனர்கள் இந்த காணொளியைப் பகிர்ந்து, “கடலுக்கடியிலுள்ள ஸ்ரீ ராமர் சேது பாலம்”, “ஸ்கூபா டைவர்ஸுக்கு வாழ்த்துகள்…” போன்ற கூற்றுக்களுடன் என பதிவிட்டிருந்தனர்.
X, டிக்டொக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பகிரப்பட்ட இந்த காணொளியை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த காணொளியின் உண்மைத்தன்மையை அறிய, நாம் முதலில் இந்த காணொளியின் Keyframeகளை google reverse image search முறையைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது, இதுதொடர்பில் எந்தவொரு நம்பகமான அறிக்கைகள் அல்லது வெளியீடுகளை எம்மால் காணமுடியவில்லை.
இந்த காணொளியில் காணப்பட்ட சில அசாதாரண ஒளியமைப்பு, அசைவு என்பவற்றை அவதானித்த நிலையில் இது செயற்கை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நாம் ஊகித்தோம். எனவே இந்த காணொளியின் ஒரு சில பகுதியை AI உள்ளடக்கங்களை கண்டறியும் கருவியான HIVE Moderation இன் மூலம் பரிசோதித்தபோது, இது 99.9% AI இனால் உருவாக்கப்பட்டது/ deepfake உள்ளடக்கத்தைக் கொண்டது என கண்டறிய முடிந்தது.
மற்றொரு AI உள்ளடக்கங்களை கண்டறியும் தளமான WasItAI மூலமும் இந்தக்காணொளியிலுள்ள சில நிலைப்படங்களை ஆராய்ந்தபோது, இந்த படங்கள் அல்லது அதன் குறிப்பிடத்தக்களவான பகுதி AI ஆல் உருவாக்கப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், மார்ச் 27, 2025 அன்று @bharathfx1 எனும் watermark உடன் @bharathfx1 எனும் Instagram கணக்கில் இந்த காணொளி பதிவிடப்பட்டிருப்பதையும் கண்டோம்.
“இந்த reel இல் காட்டப்பட்டுள்ள படங்கள்/காணொளிகள் முழுவதுமாக AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை, மேலும் எங்கள் நோக்கம் யாருக்கும் தீங்கு விளைவிப்பதல்ல. இது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே” என இந்த காணொளியுடன் இணைக்கப்பட்ட ஒரு குறிப்பும் இந்தப்பதிவில் காணப்பட்டது.
மேலும், @bharathfx1 எனும் இந்த instagram கணக்கில் இதுபோன்ற பல முப்பரிமாண வடிவ(3D) காணொளிகளும், VFX , Animation, AI போன்ற செயற்கை வடிவவில் உருவாக்கப்பட்ட காணொளிகளும் அதிகளவில் பகிரப்பட்டிருப்பதையும் கண்டறிந்தோம்.
நீருக்கடியிலுள்ள ராமர் சேது பாலத்தின் இடிபாடுகளை ஆராயும் ஸ்கூபா டைவர்ஸின் காணொளி உண்மையானதல்ல. இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
எமது மூலங்கள்
Hive Moderation
WasItAI
@bharathfx1 எனும் Instagram கணக்கில் மார்ச் 27, 2025 பதிவிடப்பட்ட காணொளி
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.