Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
குருணாகல் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய காணொளி.
பரவும் காட்சி உண்மையானதல்ல. அவை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வேறு இரண்டு குழந்தைகளின் காணொளிகள் தொகுப்பாகும்.
இலங்கையில் பரகஹதெனிய, சிங்கபுரவீதி வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு எனக்கூறி ஒரு குழந்தையின் காணொளி சமூக ஊடக தளங்களில் தற்போது பரவி வருகிறது.
Tiktok இல் இந்த காணொளியை பகிர்ந்த பயனரொருவர் “இலங்கையில் பரகஹதெனிய, சிங்கபுர வீதி வயல் வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய புகைப்படம்… இந்த குட்டி தேவதையின் அழகைப் பாருங்கள்..” எனும் தலைப்போடு இதனைப் பகிர்ந்திருந்தார்.
டிக்டொக், பேஸ்புக், யூடியூப் மற்றும் X தளங்களில் வைரலாக பரவிய இந்த குழந்தை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் கொண்ட பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
எமது முதற்கட்ட ஆய்வில் இலங்கையில் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியில் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டதாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கின்றனவா என நாம் ஆராய்ந்தோம். அதன்போது குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் கடந்த வியாழக்கிழமை (17.07.2025) பிற்பகல் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்த செய்தியறிக்கையை கண்டறிய முடிந்தது.
எனினும் அந்த செய்தியறிக்கையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டறியக்கூடியவகையிலான புகைப்படங்கள் அல்லது காணொளிகள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியின் key frameகளை reverse image search முறையைப் பயன்படுத்தி ஆராய்ந்ததில் இப்பதிவுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் குழந்தையின் காணொளிகள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சமூக ஊடக கணக்குகளால் பகிரப்பட்ட குழந்தைகளுடையது என கண்டறிய முடிந்தது.
அதி ஒரு காணொளி கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி Ihaan_aizel என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததமை காணக்கிடைத்தது.
மற்றைய காணொளி Cute Babies என்ற யூடியூப் அலைவரிசையில் இம்மாதம்15 ஆம் திகதி (15.07.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் கண்டறிய முடிந்தது.
இலங்கையில் சிங்கபுரவீதி வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட, பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை 17.07.2025 ஆம் திகதியன்று பொலிஸாருக்கு கிடைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் இந்த காணொளிகள் அதற்கு முன்னரே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய காணொளி என பரவும் காணொளி உண்மையானதல்ல. அவை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சமூக ஊடக கணக்குகளால் பகிரப்பட்ட வேறு குழந்தைகளின் காணொளிகளாகும்.
எமது மூலங்கள்
19.07.2025 அன்று Ada Derana YouTube இல் வெளியான செய்தியறிக்கை.
26.04.2025 அன்று Ihaan_aizel Instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட குழந்தையின் காணொளி.
15.07.2025 அன்று Cute Babies YouTube இல் வெளியான குழந்தையின் காணொளி.