Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, அவரது கணவர் 2025 ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னரே முதல் முறையாக தனது புற்றுநோய் நிலை குறித்துப் பேசினார்.
இல்லை. பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, தனது கணவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே, 2023 ஆம் ஆண்டிலேயே புற்றுநோயுடனான தனது போராட்டம் மற்றும் சிகிச்சை பற்றி வெளிப்படையாக பேசினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, தனது கணவர் 22 ஆகஸ்ட் 2025 வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட பிறகுதான் முதல் முறையாக தனது புற்றுநோய் நிலை குறித்து பேசியதாக சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர். டிக்டொக்கில் வைரலாகும் இப்பதிவிற்கான ஒரு உதாரணத்தை இங்கே காணலாம்.
2023 அக்டோபர் 14 ஆம் திகதி, இலங்கை இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் பேராசிரியர் விக்ரமசிங்க சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார். அதன்போது, தனது உரையில், தனக்கு 4 ஆம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அவரின் உரையை இவ் யூடியூப் காணொளியில் பார்வையிட முடியும்.
மேலும், அக்டோபர் 15, 2023 அன்று, தி சண்டே டைம்ஸ் ஊடகவியலாளர் குமுதினி ஹெட்டியாராச்சிக்கு வழங்கிய நேர்காணலில், கோவிட்-19 தொற்றுநோய் வரையிலான அவரது புற்றுநோய் பயணத்தை விபரித்தார்.
தி சண்டே டைம்ஸில் வெளிவந்த நேர்காணலை இங்கே காணலாம்.
இவ்விரண்டு பதிவுகளும், பேராசிரியர் விக்ரமசிங்க 2023 முதல் தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனுவில் அவரது மனைவியின் நோய் நிலைமை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவரது மனைவி 4 ஆம் நிலை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கணவர் ரணில் விக்ரமசிங்கவின் கவனிப்பும் கவனமும் தேவை என்றும் கூறியதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த கூற்று பிரபலமடைந்தது. இந்தக் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பயனர்கள், பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, அவரது கணவர் கைது செய்யப்பட்ட பின்னரே முதல் முறையாக புற்றுநோயைப் பற்றிப் பகிரங்கமாகப் பேசுவதாகவும், இது அவரது நோக்கம் குறித்த சந்தேகங்களை எழுப்புவதாகவும் குற்றம் சாட்டினர்.
பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க தனது கணவர் கைது செய்யப்பட்ட பின்னரே தனது புற்றுநோய் தொடர்பில் முதன்முறையாக வெளிப்படையாக பேசினார் என்ற கூற்று உண்மையல்ல. அக்டோபர் 2023 முதல் ஒரு பொது நிகழ்விலும், ஒரு தேசிய பத்திரிகைக்கான நேர்காணலிலும் தனது னாய் நிலைமை குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
Q1. ரணில் கைது செய்யப்பட்ட பிறகுதான் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க தனது புற்றுநோய நிலைமையை வெளிப்படுத்தினாரா?
இல்லை. அவர் முதன்முதலில் தனது நோய் நிலைமை பற்றி அக்டோபர் 2023 இல் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
Q2. அவர் முதலில் தனது புற்றுநோய் நிலைமை பற்றி எங்கே வெளிப்படுத்தினார்?
அக்டோபர் 14, 2023 அன்று இலங்கையில் நடந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கிலும், அக்டோபர் 15, 2023 அன்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
Q3. அவருக்கு என்ன வகையான புற்றுநோய் உள்ளது?
அவர் 4 ஆம் நிலை மார்பகப் புற்றுநோயுடன் போராடி வருவதாக வெளிப்படுத்தினார்.
Q4. இந்தக் கூற்று சமீபத்தில் ஏன் வைரலானது?
ஏனெனில் ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனுவில் அவரது நோய் குறிப்பிடப்பட்டுள்ளதால், இது சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்தது.
எமது மூலங்கள்
2023.10.15 அன்று The Sunday Times பத்திரிகையில் வெளியான மைத்ரி விக்ரமசிங்கவின் நேர்காணல்
2023.10.14 அன்று Newsfirst English யூடியூபில் வெளியான இலங்கை இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் நிகழ்வில் மைத்ரி விக்ரமசிங்க வழங்கிய உரை.