Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

15 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இலங்கைக்கு வந்தபோது பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்ததாக பரவும் புகைப்படங்கள்.
இதுபோன்ற சந்திப்பு எதுவும் இடம்பெறவில்லை. வைரலாகும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை.
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் செய்தபோது, அவரை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய கௌரவித்ததாகக் கூறப்படும் பல புகைப்படங்கள் TikTok, Facebook, Instagram மற்றும் X உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இப்பதிவுகள் சிலவற்றை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.




முதலில், “வைபவ் சூரியவன்ஷி ”, “இலங்கை பிரதமர்”, “கிரிக்கட்” மற்றும் “ஹரிணி அமரசூரிய” போன்ற முக்கிய சொற்களைப் பயன்படுத்தி தேடலை மேற்கொண்டோம். இலங்கையில் தற்போது நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில்(Tri-Nation Series) இந்தியா A, இலங்கை A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் பங்கேற்றுள்ளன. அதில் இந்தியா A அணி சார்பாக பங்கேற்க வைபவ் சூர்யவன்ஷி இலங்கைக்கு வருகை தந்திருப்பதை உறுதிப்படுத்தினோம்.
ஆனால், ஹரிணி அமரசூரிய மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே எந்தவொரு சந்திப்பும் நடைபெற்றதான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர், புகைப்படங்களை உன்னிப்பாக ஆய்வு செய்தபோது, இலங்கையின் தேசியக் கொடி சரியான வடிவில் இல்லாமல் அதன் ஒரு பகுதி காணாமல் போயிருப்பதை கவனித்தோம். அதேபோல், அதிகப்படியான நிறத் தீவிரம் (oversaturation) மற்றும் மங்கலான விளிம்புகள் போன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களுக்குரிய வழக்கமான அம்சங்களும் இந்த புகைப்படங்களில் காணப்பட்டன.
மேலும், சில சமூக ஊடகப் பதிவுகளில் புகைப்படங்கள் AI மூலம் உருவாக்கப்பட்டவை என்ற எச்சரிக்கை குறிப்பும் இடம்பெற்றிருந்தது. இருந்தபோதிலும், அதனுடன் இணைக்கப்பட்ட செய்தி உண்மையானது எனக் கூறப்பட்டிருந்தது.


புகைப்படங்கள் உண்மையிலேயே AI மூலம் உருவாக்கப்பட்டவையா என்பதை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, அவற்றை பல AI கண்டறிதல் கருவிகள் மூலம் பரிசோதித்தோம். அவை வழங்கிய முடிவுகள் பின்வருமாறு:
புகைப்படம் 01



புகைப்படம் 02



மேலும், பிரதான செய்தி ஊடகமான NewsWire அதனது சமூக ஊடகப் பதிவில், இந்தியா கிரிக்கெட் A அணி மற்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் ஆகிய இரண்டும் இத்தகைய சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்றும், சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் AI மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இருப்பதாகக் காட்டப்படும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை.
FAQs
Q1. வைபவ் சூர்யவன்ஷி யார்?
வைபவ் சூர்யவன்ஷி 15 வயதுடைய இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் தனது அதீத துடுப்பாட்ட திறமைகயால் தற்போது பரவலாக கவனம் பெற்று வருகிறார்.
Q2. சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்கள் எதை காட்டுகின்றன?
வைபவ் சூர்யவன்ஷி இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து, அவரது கிரிக்கெட் சாதனைகளை பாராட்டும் வகையில் விருது பெற்றதாகக் காட்டப்படுகிறது.
Q3. இந்த புகைப்படங்கள் உண்மையானவையா?
இல்லை. AI கண்டறிதல் கருவிகள் இந்தப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
எமது மூலங்கள்
Hive Moderation
Image Whisperer
Sightengine
Undetectable AI
08.06.2026 NewsWire செய்தித்தளத்தின் X தள பதிவு