Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய காணி மற்றும் கட்டிடத்திற்குள் ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) உறுப்பினர்கள் நடனமாடும் காட்சி அடங்கிய காணொளி.
இது கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தில் மாணவர்கள் ஒரு நாடகத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது பதிவு செய்யப்பட்ட பழைய காணொளியாகும்.
சமீபத்தில் மல்வானையில் உள்ள ஒரு காணி மற்றும் கட்டிடம், அதன் உரிமை தொடர்பாக சர்ச்சைக்கு உள்ளானது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது வணிக இணை ஒருவர் அந்தச் சொத்துக்கு உரிமையாளர்கள் என சிலர் குற்றம்சாட்டினாலும், அவர் அதை மறுத்துள்ளார். 2026.05.14 அன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் அந்த இடத்திற்குள் நுழைந்து, அதை உயர்கல்வித் துறைக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோரி அங்கு தங்கியிருந்து போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.
இந்நிலையில் சமீபத்தைதில் வெளியான TikTok பதிவொன்றில், சில இளைஞர்கள் நடனமாடும் காணொளியொன்றும், அதில் “அந்தரே என அழைக்கப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) உறுப்பினர்கள் மல்வானை வளாகத்தில் இவ்வாறே போராட்டம் நடத்துகிறார்கள்” என்ற சிங்கள மொழியிலான கூற்றுடன் பகிரப்பட்டிருந்தது.

இந்த காணொளி Facebook மற்றும் Instagram உள்ளிட்ட ஏனைய சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது.


இக்காணொளியின் மூலத்தை கண்டறிய, அதிலிருந்த சில முக்கிய காட்சிகளைப் பயன்படுத்தி reverse image search முறையில் தேடலை மேற்கொண்டோம். அதன்மூலம் “Dinu Liyanage” என்ற Facebook கணக்கில் 2026.05.15 அன்று இக்காணொளி பதிவிடப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இது பதிவு செய்யப்பட்டதென Tag செய்யப்பட்டிருந்தது.

மேலும், இக்காணொளியை பகிர்ந்திருந்த நபர் 2026.05.16 அன்று மற்றொரு காணொளியையும் வெளியிட்டிருந்தார். அதில், இந்தக் காட்சி உண்மையில் 2024 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும், அது IUSF இன் மல்வானை காணி தொடர்பான போராட்டங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாததால் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் விளக்கமளித்திருந்தார்.

அதே நாளில், இந்தக் காணொளி குறித்து பரப்பப்பட்ட தவறான கூற்றுகளின் screenshots-களையும் பகிர்ந்து, IUSF இன் மல்வானை காணி தொடர்பான போராட்டங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.

மேலும், இது இறுதியாண்டு பல்கலைக்கழகத்தில் ஒரு நாடகத்திற்கான மேடை அமைப்பில் ஈடுபட்டிருந்தபோது, தங்களது குழு மகிழ்ச்சியாக நடனமாடிய தருணத்தை நினைவாக பதிவு செய்த காணொளிதான் இது என்றும் அவர் விளக்கமளித்தார்.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது நடைபெற்ற அரகலய போராட்டங்களின் போது, பல அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பொதுமக்கள் மற்றும் கும்பல்களால் தாக்கப்பட்டன. இவ்வாறான சொத்துக்கள் ஊழல் செய்யப்பட்டு வாங்கப்பட்டவை என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடந்தன.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட மல்வானை காணியும் அப்போது தீவைக்கப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும். ஆனால், இந்த உரிமை தொடர்பான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் ஆதாரங்களின் பற்றாக்குறையால் நிலைநிறுத்தப்படவில்லை.
2022.06.03 அன்று, மல்வானையில் உள்ள 16 ஏக்கர் நிலத்தில் இந்தக் கட்டிடத்தை நிர்மாணிக்க அரசுப் பணம் மோசடி செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பசில் ராஜபக்ச மற்றும் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர், அந்தக் காணி தொடர்பான சட்டபூர்வ உரிமையாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை. தற்போது அந்த மல்வானை வளாகம் நீதி அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த மல்வானை வளாகம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உயர்கல்வித் துறைக்கு வழங்க வேண்டும் எனக் கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) உறுப்பினர்கள் அங்கு நுழைந்து போராட்டத்தை மேற்கொண்டனர்.
2026.05.18 அன்று IUSF மற்றும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியாவிற்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர்,மல்வானை காணியானது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) ஒப்படைக்கப்பட்டு, உயர்கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய மல்வானை காணி தொடர்பில் அண்மையில் நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) உறுப்பினர்களின் போராட்டம் மற்றும் அவ்வீட்டின் ஆக்கிரமிப்பின்போது இளைஞர்கள் நடனமாடியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தவறானவை. இந்தக் காணொளி சமீபத்தில் Facebook-இல் மாணவியொருவரால் பகிரப்பட்ட கொழும்பின் ஸ்ரீபாலி வளாகத்தில் 2024இல் பதிவு செய்த காணொளியாகும்.
FAQs
Q1. இந்தக் காணொளியில் என்ன காட்டப்படுகிறது?
சில இளைஞர்கள் நடனமாடுவதோடு, பின்னணியில் சிலர் பலகைகளைக் கொண்டு அமைப்புகளைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். “மல்வானை இல்லத்தில் கடுமையான போராட்டத்தில் ஈடுபடும் அந்தரே மாணவர்கள் இவ்வாறே இருக்கின்றனர்… அவர்களது பெற்றோருக்கு அனுதாபம் தெரிவிக்கவும்” என்ற சிங்கள குறிப்புடன் இக்காணொளி பகிரப்பட்டது.
Q2. இந்தக் காணொளியை முதலில் யார், எப்போது, எங்கே பதிவிட்டார்?
“Dinu Liyanage” என்ற நபர் 2026.05.15 அன்று Facebookஇல் இந்தக் காணொளியை பதிவிட்டார்.
Q3. இந்தக் காணொளி மல்வானையில் IUSF மேற்கொண்ட போராட்டங்களுடன் ஏதேனும் வகையில் தொடர்புபட்டதா?
இல்லை. இந்தக் காணொளி 2024 ஆம் ஆண்டு “Dinu Liyanage” எனும் மாணவியின் பல்கலைக்கழகக் குழுவினர் தயாரித்த குழு திட்டப் பணிக்கான காட்சியாகும்.
எமது மூலங்கள்
Dinu Liyanage என்ற Facebook கணக்கில் 2026.05.15 அன்று வெளியிடப்பட்ட பதிவு.
Dinu Liyanage என்ற Facebook கணக்கில் 2026.05.16 அன்று வெளியிடப்பட்ட பதிவு.
Dinu Liyanage என்ற Facebook கணக்கில் 2026.05.16 அன்று வெளியிடப்பட்ட பதிவு.