Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
இவ்வருட NPP மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க “இந்த அரசு உருவாக்கப்பட்டதும், தக்கவைக்கப்படுவதும் வடக்கு மற்றும் மலைநாட்டு மக்களாலே” என்று கூறியதாக News 1st வெளியிட்ட செய்தியறிக்கையாக பேஸ்புக்கில் பரவும் பதிவுகள்.
இந்தக் கூற்று தவறானது. “இந்த அரசு உருவாக்கப்பட்டதும், தக்கவைக்கப்படுவதும், இந்நாட்டின் மக்களாலே! அவர்கள் மூலமே வெற்றிக்குக் கொண்டு செல்லப்படுகிறது” என ஜனாதிபதி மே தினக் கூட்டத்தில் தெரிவித்த கருத்தை News 1st வெளியிட்ட செய்திப் பதிவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
News 1st செய்தி நிறுவனத்தால் சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட செய்யதியறிக்கையாக பேஸ்புக்கில் ஒரு பதிவு பரவலாக பகிரப்பட்து வருகிறது. அதில் “මේ ආණ්ඩුව හැදුවේ, මේ ආණ්ඩුව රකින්නේ, උතුරේ ජනතාවයි කදුකරයේ ජනතාවයි” அதாவது “இந்த அரசு உருவாக்கப்பட்டதும், தக்கவைக்கப்படுவதும் வடக்கு மற்றும் மலைநாட்டு மக்களாலே” ஜனாதிபதி 2026 மே 1 அன்று நடைபெற்ற NPP மே தினக் கூட்டத்தில் கூறியதாக இப்பதிவுகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற பிரிவினைவாத கருத்தை ஜனாதிபதி தெரிவித்தாரா என்பது தொடர்பில் எமக்கு ஏற்பட்ட சந்தேகத்தினடிப்படையில் நாம் இந்த பதிவுகளின் உண்மைத்தன்மையை ஆராய தீர்மானித்தோம்.
முதலில் இப்பதிவின் நம்பகத்தன்மையை ஆராய முக்கிய சொற்கள் மூலம் தேடல் மேற்கொண்டோம். எனினும் எந்தவொரு நம்பகமான செய்தி ஊடகங்களும் இதுபோன்ற செய்தியறிக்கையை வெளியிட்டிருக்கவில்லை.
News 1st இன் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தபோது, இது போன்ற எந்தவொரு பதிவையும் வெளிட்டிருக்கவில்லையெனவும், மாறாக ஜனாதிபதி மே தின நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்றுமொரு பதிவு இதே புகைப்படத்துடனும், வடிவமைப்புடனும் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டோம்.
அந்தப் பதிவில், “මේ ආණ්ඩුව හැදුවේ, මේ ආණ්ඩුව රකින්නේ, මේ ආණ්ඩුවට ජයග්රහණ ගෙනත් දෙන්නේ මේ රටේ ජනතාවයි” – அதாவது “இந்த அரசு உருவாக்கப்பட்டதும், தக்கவைக்கப்படுவதும், இந்நாட்டின் மக்களாலே! அவர்கள் மூலமே வெற்றிக்குக் கொண்டு செல்லப்படுகிறது” என ஜனாதிபதி கருத்து தெரிவித்ததாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், 2026.05.01 அன்று NPP YouTube தளத்தில் வெள்ளியிடப்பட்ட்ட, 2026 மே தின நிகழ்வில் ஜனாதிபதியின் முழு உரையை ஆராய்ந்தபோது, அவர் “இந்த அரசு உருவாக்கப்பட்டதும், தக்கவைக்கப்படுவதும், இந்நாட்டின் மக்களாலே! அவர்கள் மூலமே வெற்றிக்குக் கொண்டு செல்லப்படுகிறது” என்றே குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும், பிரதேசவாதமான எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் உறுதிப்படுத்த முடிந்தது.
“இந்த அரசு வடக்கு மற்றும் மலைநாட்டு மக்களால் உருவாக்கப்பட்டது” என்று ஜனாதிபதி கூறியதாக பரவும் வைரல் கூற்று தவறானது. அவர் உண்மையில் கூறியதாவது, “இந்த அரசு இந்த நாட்டின் மக்களால் உருவாக்கப்பட்டது, அவர்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது, மேலும் அவர்கள் மூலம் வெற்றிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.” என்பதாகும். சமூக ஊடகங்களில் News 1st செய்தியறிக்கை வடிவில் பரவி வரும் பதிவானது திருத்தியமைக்கப்பட்ட பதிவாகும்.
FAQs
Q1. What does the viral news article say?
It states that the President said that this government was formed and maintained by the people of the North and the Hill Country only.
Q2. Did the President make such a statement?
No. What he said was a general statement referring to all the people of the country.
Q3. Was this post that went viral on social media published by News 1st?
No. The post published by News 1st contains the actual statement made by the President. These posts have been created using the News 1st format incorrectly.
எமது மூலங்கள்
2026.05.01 அன்று NPP Sri Lanka YouTube இல் வெளியான ஜனாதிபதியின் மே தின நிகழ்வின் உரை.
2026.05.01 அன்று News 1st சிங்கள மொழியில் வெளியிட்டிருந்த Facebook பதிவு.