Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய ஒரு மருந்தை இலங்கை கண்டுபிடித்துள்ளது.
இலங்கையில் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. புற்றுநோய் பராமரிப்பை ஆதரிப்பதற்கான தொடர்ச்சியான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, கொழும்பு பல்கலைக்கழகம் 2022 ஆம் ஆண்டில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து தயாரிப்பை உருவாக்கியது. இது புற்றுநோயை குணப்படுத்தும் என்பதை பல்கலைக்கழகமும் மருத்துவ நிபுணர்களும் மறுத்துள்ளனர்.
“இலங்கையில் புற்றுநோய் செல்களைக் கொல்லும் மருந்து கண்டுபிடிப்பு” மற்றும் “இலங்கையில் புற்று நோய் மருந்து கண்டுபிடிப்பு!” போன்ற தலைப்புகளுடன், புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்தை இலங்கை கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் வைரலாக பரப்பப்படுகின்றன.
அவ்வாறு பகிரப்பட்ட TikTok பதிவொன்றில், “புற்றுநோய்க்கு எதிரான புதிய மருந்து இலங்கையில் கண்டுபிடிப்பு….. கொழும்பு பல்கலையின் புதிய மைல்கல்” என குறிப்பிடப்பட்டிருந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் (IBMBB) பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு 17 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த மருந்தைக் கண்டுபிடித்ததாக இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்ற பதிவுகள் Facebook, TikTok மற்றும் YouTube தளங்களிலும் பகிரப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.





அண்மையில் பேராசிரியர் சமீர ஆர். சமரகோன், Vernolac தொடர்பான தொடர்ச்சியான நான்கு ஆய்வுகளில் இரண்டு ஆய்வுகள் சமீபத்தில் வெளியிட்டதாகவும், புற்றுநோய் செல்களை இலக்காகக் கொண்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து மருந்து 2027 ஆம் ஆண்டுக்குள் சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருவாயாக ஈட்டக்கூடும் என்றும் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குறித்த ஊடகங்களின் கவனம் மீண்டும் அதிகரித்தது. பிராதன ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், பொதுமக்களின் தவறான புரிதலினால் புற்றுநோய்க்கான மருந்தை இலங்கை கண்டுபிடித்திருப்பதாக அவை சமூக ஊடகங்களில் பரவத்தொடங்கியது.
இலங்கை புற்றுநோயைக் குணப்படுத்த ஒரு மருந்தைக் கண்டுபிடித்ததாக பரவும் கூற்று தவறானது. கொழும்பு பல்கலைக்கழகம் 2022 ஆம் ஆண்டில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து தயாரிப்பை உருவாக்கியது. எனினும் அது புற்றுநோய்க்கான சிகிச்சையாக நிரூபிக்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை. பல்கலைக்கழகமும் இதனுடன் தொடர்புடைய மருத்துவ அதிகாரிகளும் சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தவறான கூற்றுகளை பகிரங்கமாக மறுத்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
FAQs
Q1. கொழும்பு பல்கலைக்கழகம் புற்றுநோயைக் குணப்படுத்த ஒரு மருந்தைக் கண்டுபிடித்ததா?
இல்லை. இந்த தயாரிப்பு ஒரு ஊட்டச்சத்து பொருளாகும். இது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கக்கூடிய அல்லது குணப்படுத்தக்கூடிய ஒரு மருந்து அல்ல.
Q2. Vernolac என்றால் என்ன?
Vernolac என்பது புற்றுநோய் சிகிச்சையை ஆதரிப்பதற்கும் நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு மூலிகை அடிப்படையிலான ஊட்டச்சத்து மருந்து ஆகும். இது புற்றுநோயைக் குணப்படுத்தாது.
Q3. இந்த தயாரிப்பு தொடர்பில் பேராசிரியர் சமீர ஆர். சமரகோனின் கருத்து என்ன?
இது ஒரு மருந்து அல்ல என்றும், ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சிகிச்சைகளுக்கு தகுதிவாய்ந்த மருத்துவர்களிடமிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
Q4. வைரலாகப் பரவி வரும் இந்த கூற்றுக்கள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன?
பல்கலைக்கழகம் இந்தக் கூற்றுக்களை மறுத்து ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டது, மேலும் அதன் பெயர் மற்றும் இலச்சினையை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதற்கு எதிராகவும் எச்சரித்துள்ளது.
எமது மூலங்கள்
03.10.2025 அன்று டெய்லி மிரர் யூடியூப் அலைவரிசையில் வெளியான பேராசிரியர் சமீர ஆர். சமரக்கோனின் நேர்காணல்.
06.10.2025 அன்று வீரகேசரி வலைத்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
03.10.2025 அன்று அத தெரண வலைத்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
03.10.2025 அன்று ஹிரு நியூஸ் வலைத்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
06.10.2025 அன்று டெய்லி மிரர் வலைத்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
27.10.2023 அன்று கொழும்பு பல்கலைக்கழக வலைத்தளத்தில் வெளியான அறிக்கை.
Fadna Tea Pvt. Ltd இணையதளத்தில் Vernolac தயாரிப்பிற்கு வழங்கப்பட்டுள்ள விளக்கம்.
05.10.2025 அன்று கொழும்பு பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு.
10.10.2025 அன்று கொழும்பு பல்கலைக்கழக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மறுப்பு அறிக்கை.
09.10.2025 அன்று கொழும்பு பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு.
08.10.2025 அன்று பேராசிரியர் சமரக்கோனின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பதிவு.
06.10.2025 அன்று இலங்கை புற்றுநோய் மருத்துவர் சங்கம் வெளியிட்ட பேஸ்புக் பதிவு.
19.07.2025 அன்று வெளியிடப்பட்ட Vernolac பற்றிய ஆய்வறிக்கை.