Claim: அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மருத்துவரின் புகைப்படம்.
Fact: இது தவறான தகவல். இப்புகைப்படங்களில் காணப்படும் நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர் வைத்தியர் அல்ல. இவர் நன்கு அறியப்பட்ட சுகாதார கருத்துக்களை பகிரும் பிரபலமான “Health Influencer” ஆவார். பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
கடந்த வாரம் 10ஆம் திகதி திங்கட்கிழமை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வைத்தியர் என ஒரு பதிவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த பதிவிலுள்ள புகைப்படத்தில் புடவையணிந்த ஸ்டெதாஸ்கோப் உடனான ஒரு இளம் பெண்ணின் படம் காணப்படுகிறது. மேலும், “மருத்துவர்களின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளில்… ஒரு அழகான பெண் மருத்துவர் பாலியல் பசி கொண்ட ஒரு மனிதனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இதோ அநுராதபுரம் மருத்துவமனையில் நடந்த கதை…” எனும் கூற்றுடன் இந்த பதிவு பகிரப்பட்டிருந்தது.

இதுபோன்ற பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் அதிக அளவில் கவனம் பெற்று வருவதால் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க நாம் முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்த புகைப்படத்திலிருப்பவரை அடையாளம் காண நாம் முதலில் Reverse Image Search முறையை பயன்படுத்தினோம். அதனடிப்படையில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான வைத்தியர் அல்ல எனவும், இவர் சமூக ஊடகங்களில் சுகாதார கருத்துக்களை பகிரும் பிரபலமான வைத்தியர் பிரியா சம்மணி என அடையாளம் கண்டோம்.

மேலும், அவரது பேஸ்புக் பக்கத்தை நாம் ஆய்வு செய்தபோது, இப்புகைப்படம் அவரது அனுமதியின்றி இதுபோன்று தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையை அவர் பதிவிட்டிருப்பதை நாம் கண்டோம்.

“[மக்கள்] இந்த graphic-ஐ எனது புகைப்படத்துடன் எடிட் செய்துள்ளனர், இது என்னை மிகவும் பயங்கரமாக, புண்படுத்தும் விதமாக பெருமளவில் பகிரப்பட்டிருக்கிறது. அது பொய்யான தகவலாகும். உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இந்த பதிவை முறைப்பாடு செய்யுங்கள். இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு(CERT )இந்த படத்தை பதிவிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என அவர் இந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வைத்தியர் தொடர்பில் அதிகாரப்பூர்வமான அல்லது நம்பகமான செய்தி மூலங்கள் ஏதேனும் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனவா என்பதையும் நாங்கள் ஆராய்ந்தோம். ஆனால் அவ்வாறான எந்த தகவலையும் எம்மால் கண்டறிய முடியவில்லை. மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வைத்தியரின் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்ட பதிவை நாம் கண்டோம்.
Conclusion
சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் புகைப்படத்திலிருப்பது, கடந்த வாரம் 10ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மருத்துவரல்ல, மாறாக பொதுமக்களால் நன்கு அறியப்பட்ட சுகாதார கருத்துக்களை பகிரும் பிரபலமான “Health Influencer” ஆவார்.
Result: False
எமது மூலங்கள்
வைத்தியர் பிரியா சம்மணியின் பேஸ்புக் பதிவு
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.