Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Communal
தென்னிந்திய நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான தளபதி விஜய், சமீபத்தில் அவருடைய பொதுக்கூட்டத்தில் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து அகற்றிவிடுவதாக கூறினார்.
இந்த கூற்று தவறானது. இந்த காணொளி சமீபத்தைய அவரது TVK பொதுக் கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. 2011 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் ஒரு பொதுக் கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான தளபதி விஜய், பொதுக்கூட்டத்தில் இலங்கை தொடர்பாக பேசும் காணொளியொன்று சமீபத்தில் அதிகளவில் பரவி வந்தது. இந்நிலையில் “உலக வரைபடத்திலிருந்து இலங்கையை அகற்றிவிடுவதாக விஜய் கூறினார்.” என்ற சிங்கள மொழியிலான தலைப்பொன்றுடன் இந்த காணொளி டிக்டொக்கில் பகிரப்பட்டிருந்தது.
இதே காணொளி தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான தலைப்புகளுடன் பேஸ்புக் மற்றும் டிக்டொக்க்கில் பகிரப்பட்டிருந்ததையும் நாம் அவதானித்தோம். அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
அவரின் உரையை இவ் யூடியூப் காணொளியில் பார்வையிட முடியும்.
4. மேலும், 2011.02.22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டதை செய்தியறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த செய்தியறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
தென்னிந்திய நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இவ்வருடம் ஆகஸ்ட் 25ஆம் திகதி மதுரையில் இடம்பெற்றது. இதன்போது அவர் இலங்கைக்கு உரித்தான கச்சத்தீவு குறித்து தெரிவித்த கருத்துகள் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தின. “தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவை மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.” இந்த கருத்து இலங்கையின் அரசியில் மட்டங்களிடலும், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் முக்கிய பேசுபொருளாகியது.
தென்னிந்திய நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான தளபதி விஜய், சமீபத்தில் அவருடைய பொதுக்கூட்டத்தில் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து அகற்றிவிடுவதாக கூறினார் என பரவும் பதிவுகள் தவறானவை. இது மீனவர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஜய் பெப்ரவரி 22, 2011 அன்று நாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது.
FAQs
1. இலங்கையை உலக வரைபடத்திலிருந்து அகற்றிவிடுவேன் என நடிகர் விஜய் கூறினாரா?
இல்லை. “உலக வரைபடத்தில் இலங்கையெனும் ஒரு இடமே இல்லாமல் போய்விடும் ” என்றே அவர் பொதுக்கூட்டமொன்றில் கூறுகிறார்.
2. உலக வரைபடத்தில் இலங்கை தொடடர்பான இந்த கருத்தை எப்போது தெரிவித்தார்?
மீனவர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஜய் 22.02. 2011 அன்று நாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திலே அவர் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்தார்.
3. இந்த காணொளி சமீபத்தில் ஏன் வைரல் ஆனது?
25.08.2025 மதுரையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த காணொளிகள் வைரலாக ஆரம்பித்தது.
எமது மூலங்கள்
3 Mar 2011 அன்று Thalapathy E எனும் youtube அலைவரிசையில் வெளியான, 2011.02.22 நாகப்பட்டின பொதுக் கூட்டத்தில் விஜய் ஆற்றிய உரை.
23.02.2011 அன்று Times of India செய்தி வலைத்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
23.02.2011 அன்று The Hindu செய்தி வலைத்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.