Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
ஜப்பானில் சமீபத்தில் (ஏப்ரல் 20, 2026) ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைக் காட்டும் வைரல் காணொளி.
அந்தக் காணொளி ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் காட்டவில்லை. அது, ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 01.01.2024இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவு செய்யப்பட்ட ஒரு பழைய காணொளியாகும்.
சமீபத்தில், ஏப்ரல் 20, 2026 அன்று ஜப்பானின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதோடு இது சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது. இந்தச் சம்பவம் பரவலான கவனத்தைப் பெற்றதால், அதன் தாக்கத்தைக் காட்டுவதாகக் கூறி ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
அந்தக் காணொளி, “முக்கியச் செய்தி: ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்” போன்ற தலைப்புகளில் டிக்டாக் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது வடகிழக்கு ஜப்பானுக்கு அப்பால் ஏற்பட்ட ஒரு நில அதிர்வு நிகழ்வுடன் தொடர்புடையது என்றும் கூறும் தலைப்புகளுடன் பகிரப்பட்டுள்ளது.
இந்தப் பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.



இந்தக் கூற்றைச் சரிபார்க்க, ஜப்பானில் பதிவான நிலநடுக்கம் குறித்த சமீபத்திய சர்வதேச ஊடகச் செய்திகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில், இந்த வைரல் காணொளியுடன் பொருந்தக்கூடிய சமீபத்திய நிலநடுக்கம் தொடர்பான காணொளியோ அல்லது புகைப்படங்களோ காணக்கிடைக்கவில்லை.
Google reverse image search மூலம், இந்த காணொளி 11.01.2024 அன்று “MBS NEWS” என்ற யூடியூப் அலைவரியால் ஜப்பானிய மொழியிலான தலைப்பொன்றுடன் பதிவேற்றப்பட்டது என்பதை கண்டறிந்தோம். அதன் மொழிபெயர்ப்பு, “[நிலநடுக்கமேற்பட்ட தருணம்] வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுகின்றன… மின்கம்பிகள் கடுமையாக அதிர்கின்றன, மக்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர் – நோட்டோ தீபகற்ப நிலநடுக்கத்தின் போது இஷிகாவா மாகாணத்தின் அனமிசு நகரக் காட்சிகள் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
01.01.2024 அன்று நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள அனமிசு நகரில் ஒரு காருக்குள் இருந்து பதிவுசெய்யப்பட்டது. அந்த நிலநடுக்கம் அதிகபட்சமாக 7 ரிக்டர் அளவை எட்டியத என அந்த காணொளியின் விளக்கம் குறிப்பிடுகிறது.
அதே காணொளி, 06.01.2024 அன்று X தளத்திலும் @moyamamaayu33 என்ற பயனரால் பகிரப்பட்டது. சுனாமி எச்சரிக்கைக்குப் பிறகு குடும்பத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தபோது, நிலநடுக்கத்தின் போது இந்தக் காணொளியைத் அவர்கள் பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
The earthquake mentioned in these videos is the Noto Peninsula Earthquake (Mw 7.6) that occurred on 01.01.2024 . It caused significant damage in several coastal prefectures of Japan and triggered tsunami warnings.
ஜப்பானில் சமீபத்தில் 20.04.2026 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் காட்டுவதாகக் கூறப்படும் வைரல் காணொளியானது, உண்மையில் ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் 01.01.2024 அன்று நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காணொளிக் காட்சிகளைக் காட்டுகிறது.
FAQs
Q1. இந்தக் காணொளி 2026.04.20 அன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் காட்டுகிறதா?
இல்லை. இந்தக் காணொளி சமீபத்திய எந்த நிலநடுக்கத்துடனும் தொடர்பற்றது.
Q2. இந்தக் காணொளி எப்போது, எங்கே பதிவு செய்யப்பட்டது?
இது ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள அனமிசு நகரில், 01.01.2024 அன்று நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவு செய்யப்பட்டது.
Q3. இந்தக் காணொளி முதலில் எப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது?
இந்தக் காணொளி 2024 ஜனவரி மாதத்தில், அதைப் பதிவுசெய்த நபரொருவரால் X தளத்திலும், “MBS NEWS” எனும் யூடியூப் அலைவரிசையிலும் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டது.
எமது மூலங்கள்
11.01.2024 அன்று “MBS NEWS” யூடியூப் அலைவரிசையில் பதிவேற்றப்பட்ட காணொளி.
06.01.2024 அன்று X தளத்தில் @moyamamaayu33 என்பவரால் பதிவு செய்யப்பட்ட காணொளி.