Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim: இந்து காவியமான ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்ணனின் வாள்
Fact: செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட படங்களை.
நான்கு புகைப்படங்களைக் கொண்ட ஒரு காணொளி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகப்பெரிய வாளொன்றுக்கு அருகில் இருப்பதைக் காட்டுகிறது. இந்த வாள் இந்து காவியமான ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்ணனின் வாள் என்று பயனர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் டிக்டொக்கில் காணக் கிடைத்த பதிவொன்றினை இங்கு மற்றும் இங்கு பார்வையிடலாம்.
நியூஸ்செக்கர் இந்த நான்கு புகைப்படங்களின் உண்மைத்தன்மையை கண்டறியும் முகமாக TrueMedia எனும் AI உள்ளடக்க-கண்டறிதல் கருவி மூலம் இப்படங்களை பரிசோதித்து, அவற்றுள் மூன்று படங்களில் “செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள்” உண்டென்பதை கண்டறிந்தது.
நான்காவது படத்தில் “செயற்கை தொழில்நுட்பத்தின்(AI) இன் கணிசமான ஆதாரங்களை” கண்டறிந்தாலும், TrueMedia அதை “நிச்சயமற்றது; உண்மையானதாக இருக்கலாம் அல்லது எடிட் செய்யப்பட்டிருக்கலாம்” என காண்பித்தது. ஏனெனில் அதில் பல முகங்கள் காணப்பட்டதுடன், அவை அதன் தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்டு காணப்பட்டது. அதற்கான முடிவுகளை இங்கே காணலாம்.
இந்நான்கு படங்கள் குறித்து இக்கருவியின் கண்டறிதலின்படி “ஒரு நபரின் உடல் அளவுடன் ஒப்பிடும்போது வாள் அளவின் விகிதாசாரம் அது சாத்தியமற்ற பெரிய ஆயுதமாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறது. இது பௌதீக ரீதியாக நம்பகமற்றது. கற்பனை அல்லது பொழுதுபோக்கு நோக்கங்களுக்கான கலைப்படைப்புகளில் அல்லது டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்ட படங்களில் இத்தகைய பொருள்கள் பொதுவானவை. மேலும், வாளின் நிலை மற்றும் அது தரையில் வைக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியன இது உண்மையற்றதென காட்டுகின்றது. இக்காரணிகள் இப்படங்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டதை/ எடிட் செய்யப்பட்டதை குறிக்கின்றன. Illuminarty கண்டறிதல் கருவியும், இப்படங்கள் AI இல் உருவாக்கப்பட்டதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகக் காட்டியது.
கும்பகர்ணனின் வாள் என வைரலாக பகிரப்படும் படங்கள் AI உருவாக்கியதாகக் கண்டறியப்பட்டது
எமது மூலங்கள்:
TrueMedia tool
Illuminarty tool
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.